டோக்யோ ஒலிம்பிக்: அரையிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை பிவி சிந்து!

டோக்யோ ஒலிம்பிக் 2020: பேட்மின்டன்  காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை பிவி சிந்து

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 30, 2021, 03:14 PM IST
டோக்யோ ஒலிம்பிக்: அரையிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை பிவி  சிந்து! title=

டோக்யோ ஒலிம்பிக் 2020: பேட்மின்டன்  காலிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார் இந்திய வீராங்கனை பிவி சிந்து. ஒலிம்பிக் 2020 தொடரில் பெண்கள் பேட்மிண்டன் பிரிவில் பிவி சிந்து தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். இதுவரை மூன்று போட்டிகளில் ஆடிய பிவி சிந்து, மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளார். 

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்கள் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு அகேன் யமாகுச்சியை வீழ்த்தி பி.வி.சிந்து ஒரு அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்றைய காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த அகேன் யமாகுச்சியை எதிர்கொண்ட பி.வி. சிந்து 21-13, 22-20 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் டென்மாா்க் வீராங்கனை மியா பிலிச்ஃபெல்டட்டை 21-15, 21-13 என்ற செட்களில் தோற்கடித்தாா்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News