இதற்காக தான் தோனி கடைசியாக பேட்டிங் இறங்கினாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் 2024 போட்டியில் தோனி முதல் முறையாக 9வது இடத்தில் பேட்டிங் செய்தார். இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்ட போது எம்எஸ் தோனி தனது டி20 கரியரில் முதல் முறையாக 9வது இடத்தில் பேட்டிங் செய்தார். ஆனால் ஏன் இவ்வளவு பின்னால் பேட்டிங் இறங்கினார் என்று பலரும் கேள்வி எழுதி வந்தனர். இந்நிலையில் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது. சென்னை அணியின் ரசிகர்களும், நிபுணர்களும் ஏன் தோனி முன்னாள் இறங்கிவில்லை என்று கேள்வி எழுப்பினர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான் மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோரும் தோனியை கடுமையாக விமர்சித்து பேசி இருந்தனர்.
மேலும் படிக்க | சிஎஸ்கேவின் வெறித்தனமா பௌலிங்... தோல்வியால் பஞ்சரானது பஞ்சாப் - டாப்பில் சென்னை!
அவர் இந்த வரிசையில் பேட் செய்ய விரும்பினால் அவர் அணியில் இருக்க தேவையில்லை என்றும் கூறி இருந்தனர். ஆனால், தோனி கடைசியாக பேட்டிங் செய்வதற்கு காரணம் காயம்தான் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. "தோனி காலில் தசைக் கிழிந்திருப்பதால் மைதானத்தில் அதிக நேரம் ஓடாமல் தவிர்த்து வருகிறார். அதன் காரணமாக ரன்கள் எடுக்க ஓடுவது பிரச்சினையாக இருப்பதால் சீக்கிரமாக பேட்டிங் செய்ய ஆர்வம் காட்டவில்லை" என்று தகவல் வெளியாகி உள்ளது. சில போட்டிகளுக்கு முன்பு டேரில் மிட்செல் பாதிக்கு மேல் ஓடி வந்தும் தோனி ஓடாமல் அவரை திருப்பி அனுப்பினார். இதற்கு காரணமும் காயம் தான் என்று கூறப்படுகிறது.
மேலும் தற்போது சென்னை அணியில் இன்னொரு விக்கெட் கீப்பராக பேட்டரான டெவோன் கான்வே கிடைத்திருந்தால், தோனி சில போட்டிகளில் விளையாடி இருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. தோனி ஒவ்வொரு போட்டியில் ஆடுவதற்கு முன்பும் வலியை குறைக்க மாத்திரங்களை எடுத்து வருகிறார் என்றும், காயத்தை அதிகமாகாமல் பார்த்து கொள்கிறார் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கூட தோனி முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் பலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. சீசன் தொடங்கும் முன்பே டெவோன் கான்வே வெளியேறிய நிலையில், தற்போது காயம் காரணமாக மதீஷ பத்திரனா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் ஆகியோர் போட்டியில் இருந்து விலகி உள்ளனர். சென்னை அணி பிளே ஆப்க்கு தகுதி பெற போராடி வரும் நிலையில் இந்த காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | சிஎஸ்கே கோப்பை வெல்வது கடினம் தான்! அணியில் இருக்கும் முக்கிய பிரச்சனைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ