இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் போட்டி, இன்று மாலை திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றிய மகிழ்ச்சியுடன் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்வதால், வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்கலாம். அவருக்கு பலமுறை வாய்ப்பு கிடைத்தபோதும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால், அவ்வப்போது இந்திய அணிக்குள் வருவதும் போவதுமாக இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்திய அணிக்கு துணை கேப்டனாகும் சஞ்சு சாம்சன்!


ஆனால், இந்த முறை அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால், 20 ஓவர் உலககோப்பைக்குப் பிறகு தொடர்ச்சியாக இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார் ஸ்ரேயாஸ் அய்யர். அவரைப் போலவே ஷபாஸ் அகமது, உமேஷ் யாதவுக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளது பிசிசிஐ. இந்திய அணியில் இடம்பிடித்திருந்த முகமது ஷமி, கொரோனா தொற்று காரணமாக கடைசி நேரத்தில் அணியில் இருந்து விலக நேரிட்டது. அவருக்கு பதிலாக திடீரென அணியில் இடம் பிடித்தவர் தான் உமேஷ் யாதவ். 


இந்திய அணியின் பிக்சரிலேயே இல்லாத இவரை மீண்டும் இந்திய அணிக்கு வந்ததன் மர்மம் குறித்து கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேநேரத்தில் அவர்கள் கொடுத்த வாய்ப்பையாவது உமேஷ் பயன்படுத்திக் கொண்டாரா என்றால், இல்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் அவரின் பந்துவீச்சு விமர்சனத்துக்குள்ளானது. இருப்பினும் தென்னாப்பிரிக்கா தொடரில் அவருக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுத்துள்ளது. இந்த இரண்டு சீனியர் பிளேயர்களுக்கு மத்தியில் ஷபாஸ் அகமதுவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 3 பேரும் கிடைத்துள்ள வாய்ப்பு பயன்படுத்திக் கொண்டால், 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.     


மேலும் படிக்க | தென்னாபிரிக்க தொடரைவிட்டு விலகிய முக்கிய வீரர்! இந்திய அணிக்கு பின்னடைவு!


தென்னாப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணி


ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), தினேஷ் கார்த்திக் (WK), ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர் ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஷாபாஸ் அகமது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ