India National Cricket Team: இந்திய அணி பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரை இழந்த மெதுமெதுவாக பின்னர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டது. இங்கிலாந்து அணி உடன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இந்திய அணி விளையாட இருக்கிறது. பிப்ரவரி மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு ஒரு முன் தயாரிப்பாக இந்த இங்கிலாந்து தொடர் அமைந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய அணியின் டி20 அணி செட் ஆகிவிட்டது, அது பற்றி பிரச்னை இல்லை. தற்போது ஒருநாள் அணி மீதுதான் மொத்த கவனமும் இருக்கிறது. இங்கிலாந்து தொடரில் சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படலா். இருப்பினும், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்தியாவின் ஓடிஐ ஸ்குவாட், சாம்பியன்ஸ் டிராபியின் இந்திய ஸ்குவாட் எப்படி இருக்கும் என்பதை பலரும் எதிர்பார்த்து வருகின்றனர்.


சுப்மான் கில் டி20 அணியில் கிடையாது


அந்த வகையில் ஓடிஐ அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷ்ரேயஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் நிச்சயம் ஒருநாள் அணியில் இடம்பெறுவார்கள் எனலாம். அதே நேரத்தில், பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஷமி, சிராஜ் ஆகிய அணியில் இடம் பெறுவார்கள்.


மேலும் படிக்க | BGT தொடரில் தோல்வி! சாம்பியன்ஸ் டிராபியில் பிசிசிஐ அதிரடி மாற்றம்!


இந்நிலையில், இளம் வீரரான சுப்மான் கில், சமீபத்தில் மூன்று ஃபார்மட் வீரராக இருப்பார் என கூறப்பட்டது. மேலும், துணை கேப்டன் ஆக அவர் நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரது சமீபத்திய ஃபார்ம் இதனை பெரும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது. ஏற்கனவே அவர் டி20 அணியில் இல்லை. கடந்த டி20 உலக கோப்பை தொடரிலும் சரி, அதற்கு பிறகும் சரி அவர் டி20 அணியில் இடம் பெறவில்லை. அவரின் ஓபனிங் ஸ்பாட்டில் பல வீரர்கள் ஏற்கனவே செட்டில் ஆகிவிட்டதால் அவருக்கு டி20 அணியில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது.


உச்ச கட்ட பார்மில் ஜெய்ஸ்வால்


டெஸ்டில் அவர் தொடர்ந்து வெளிநாட்டில் சொதப்பி வருவது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. எனவே அவர் டெஸ்ட் அணியில் நீடித்தாலும் பிழைகளை இடம்பெறுவது கடினம். அப்படி இருக்க, ஒருநாள் போட்டி மட்டுமே அவர் விளையாடும் ஒற்றை பார்மட்டாக இருக்கும் எனும் பலரும் கருதினர். ஆனால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் முரட்டு பார்ம் தொடர்வதால் அது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணிக்கு கைக்கொடுக்கும். 


எனவே ரோகித் சர்மாவுடன், ஜெய்ஸ்வால்தான் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஓடிஐ அணியிலும் சுப்மான் கில்லின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகி உள்ளது. பிளேயிங் லெவனில் சுப்மான் கில் விளையாடுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு எனலாம். எனவே அவர் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு ஒரு பேக்கப் வீரராக வேண்டுமானால் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.


துணை கேப்டன் பொறுப்பு இவருக்கு தான்


எனவே அவரிடம் ஒப்படைக்கப்பட்ட துணை கேப்டன் பொறுப்பும், அவரிடம் பறிக்கப்பட்டு வேறு ஒருவருக்கு கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. ஒருநாள் அணியை பும்ரா அனுபவம் மிகுந்த வீரர் என்பதால் அவருக்கே துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய கிரிக்கெட்டின் இளவரசர் என அழைக்கப்பட்ட சுப்மான் கில்லின் கிரிக்கெட் வாழ்க்கை பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. ஓடிஐ போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 200 ரன்களை அடித்த வீரர்களின் சுப்மன் கில்லும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வு? கவுதம் கம்பீர் சொன்ன தகவல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ