இன்று இந்தியா இலங்கை மோதும் டி-20 போட்டி!
இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி இன்று (புதன்கிழமை) 20 ஓவர் ஆட்டத்தில் இலங்கையை எதிர்கொள்கிறது.
இந்த போட்டி கொழும்பில் அமைத்துள்ள பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும்.
ஏற்கனவே விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் போட்டி தொடரை 5-0 என்ற கணக்கிலும் இந்தியா வென்றது.
இரு அணிகளுக்கும் இடையே ஒரே ஒரு 20 ஓவர் போட்டி மட்டும் நடைபெறுகிறது.
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ள இந்திய அணி உற்சாகத்தில் உள்ளது. அதேவேளையில், இலங்கை அணி 20 ஓவர் போட்டியை வெல்ல கடமையாக போராடுவார்கள் என தெரிகிறது.
20 ஓவர் போட்டியில் இதுவரை இலங்கையும் இந்தியாவும் 10 முறை மோதியுள்ளன. இந்தியா 6 போட்டியிலும், இலங்கை 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.