சில சமயங்களில் வீரர்களுடன் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்: ராகுல் டிராவிட்
இந்திய தென்னாபிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
இந்திய அணி விளையாடும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டி போட்டி இன்று தொடங்குகிறது. ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருந்து இந்திய அணி இந்த தொடரில் விளையாட உள்ளது. இந்த 'பாக்சிங் டே' டெஸ்ட் போட்டிக்கு இந்தியா தயாராகி வரும் நிலையில், பதினொரு பேர் கொண்ட பட்டியலில் தங்களது பெயர் இல்லை என்று யாரும் ஏமாற்றம் அடைந்தால் நல்லது தான் என்று டிராவிட் கூறியுள்ளார்.
ALSO READ | பாக்சிங்டே-வில் இந்தியா பதிவு செய்த 3 பிரம்மாண்ட வெற்றிகள்..!
சமீபத்தில் டிராவிட் அளித்த பேட்டியில், இந்திய அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் சிறந்த ஆட்டக்காரர்கள். சில நேரங்களில் வீரர்களுடன் கடினமான உரையாடல்களை நடத்த வேண்டும். ஒரு வீரரை அணியில் எடுக்கவில்லை என்றால் அவரிடம் நேரடியாக சொல்ல வேன்டும். இது சிறிது கடினம் தான், அனைவருக்கும் பிளேயிங் 11ல் விளையாட விருப்பம் இருக்கும். பெரும்பாலான சீனியர் வீரர்கள் முதல்தர அணிகளுக்கு கேப்டனாக இருந்து உள்ளனர். எனவே அவர்களுக்கு இது புரியும்.
தொடர் முழுவதும் அணியில் இடம் பெறவில்லை என்றாலும் அதனை மனதில் வைத்து அடுத்த முறை அணியில் இடம் பெற முயற்சி செய்ய வேண்டும். இதற்கு கடின உழைப்பு மிகவும் அவசியம். ஒரு வீரர் விளையாட விரும்பிய ஆட்டத்தில், வெளியே உட்கார வைக்கப்பட்டால், அந்த சூழ்நிலையில் இருக்கும் போது அதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள், எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பது உங்கள் பக்குவத்தை போன்றது. தற்போது வரை இந்திய அணியில் எந்த வீரரும் என்னிடம் புகார் அளிக்கவில்லை.
இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதற்காக தென் ஆப்பிரிக்க அணியை சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. எதிரணியை பொறுத்தே பிளேயிங் 11 அமையும். ஒவ்வொரு வீரரின் தனிப்பட்ட திறமையை விரும்புகிறேன், ஆனால் கூட்டு முயற்சி மட்டுமே தொடரை வெல்ல உதவும் என்று கூறினார்.
ALSO READ | IND vs SA Test: வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் விராட் கோலி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR