IND vs SA Test: வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் விராட் கோலி!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடங்கவுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 25, 2021, 01:12 PM IST
  • கோலி தலைமையிலான அணி டெஸ்ட் போட்டியிலும், ரோஹித் தலைமையிலான அணி ஒருநாள் போட்டியிலும் விளையாட உள்ளது.
  • டி20 கேப்டன் பதவியில் மட்டுமே விலகி கொள்வதாக கோலி அறிவித்து இருந்த நிலையில், ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்கியது பிசிசிஐ.
IND vs SA Test: வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் விராட் கோலி! title=

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.  கோலி தலைமையிலான அணி டெஸ்ட் போட்டியிலும், ரோஹித் தலைமையிலான அணி ஒருநாள் போட்டியிலும் விளையாட உள்ளது.  விராட் கோலிக்கும் பிசிசிஐக்கு நடந்து வரும் பனி போரின் காரணமாக தற்போது டெஸ்ட் தொடரை விராட் கோலி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.  

முன்னதாக டி20 கேப்டன் பதவியில் மட்டுமே விலகி கொள்வதாக கோலி அறிவித்து இருந்த நிலையில், ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்கியது பிசிசிஐ.  இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக இருந்து வரும் கோலிக்கு தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் துரதிஷ்டமாக அமைந்துள்ளது.  கோலி தலைமையில் இந்திய அணி மற்ற நாட்டு சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் போட்டிகளில் 46.4%, ஒருநாள் போட்டிகளில் 67.1% மற்றும் T20 களில் 69.2% வென்றுள்ளது.

kohli

ஆனால் கோலி ஒரு பேட்ஸ்மேனாக சமீபகாலங்களாக சொதப்பி வருகிறார்.  2019 நவம்பருக்கு பிறகு தற்போது வரை எந்த வடிவ கிரிக்கெட் போட்டியிலும் அவர் சதம் அடிக்கவில்லை.  கடைசியாக விளையாடிய 58 இன்னிங்ஸ்களில் சராசரியாக 39.70 மட்டுமே வைத்துள்ளார்.  எனவே நாளை தொடங்கவுள்ள போட்டியில் கோலி தனது பழைய பார்மிற்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்து கொண்டுள்ளனர்.  தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கோலி 55.80 சராசரி வைத்துள்ளார்.  பிசிசிஐ உடன் மோதல் காரணமாக ஒருநாள் போட்டிகளில் கோலி விளையாட மாட்டார் என்ற வதந்திக்கு முற்று புள்ளி வைத்து நான் கண்டிப்பாக விளையாட உள்ளேன் என்று கூறியுள்ளார்.  

ALSO READ | 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News