ரிஷப் பந்திற்கு ஆஸ்திரேலிய வீரர் கூறிய முக்கிய அறிவுரை!
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹாக் ரிஷப் பண்டிற்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரின் போது இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் இந்திய அணியின் கேப்டனாக அறிமுகமானார். கடைசி டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. எவ்வாறாயினும், இந்தியா முதல் இரண்டு ஆட்டங்களில் தோற்ற பிறகு, பந்த் கேடன்சி மீது மிகப்பெரிய கேள்வி எழுந்தது. பின்பு இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும், இந்த கேள்வி நீங்கவில்லை.
மேலும் படிக்க | விஜய் மல்லையாவுடன் கிறிஸ் கெயில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்!
முன்னாள் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக், பந்த் தன்னை முன்னிறுத்தி கொள்ள வேண்டும் எனவும், மற்றவர்கள் முடிவுகளை அவர் ஏற்காமல் தன்னுடைய முடிவில் திடமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கேப்டன் பதவி குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால், முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியை அணுகி பந்த் பேச வேண்டும் அல்லது தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் பேச வேண்டும். பண்ட் செய்ய வேண்டிய ஒன்று, மிகவும் தீர்க்கமாக இருக்க வேண்டும், அணியை தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். மற்ற வீரர்கள் உள்ளே வந்து அவரது முடிவுகளை மாற்ற அனுமதிக்க கூடாது. தன்னுடைய முடிவில் தவறு ஏற்பட்டால் தான், அவரால் சுயமாக எதையும் சாதிக்க முடியும்" என்று ஹாக் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றிய வீடியோவில் கூறினார்.
மேலும் பேசிய அவர், "இந்தியா அணி தோற்கும் போது கேப்டன்சி, கேப்டன்சி, கேப்டன்சி என்று எப்போதும் ஒரு விவாதம் உள்ளது. 2022ல் ரோஹித் சர்மா கேப்டன்சியில் சாதனை படைத்துள்ளார் என்று அனைவருக்கும் தெரியும். அவர் 11 ஆட்டங்களில் கேப்டனாக இருந்து 11லும் வெற்றி பெற்றுள்ளார். அதற்காக மற்றவர்களை ரோஹித் உடன் ஒப்பிடுவது சரியான விசயமாக இருக்காது" என்று கூறினார்.
மேலும் படிக்க | இந்திய அணியில் 6 கேப்டன்கள் உள்ளனர்: பயிற்சியாளர் ராகுல் டிராவிட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR