SRH vs CSK: சென்னை அணிக்கு வெற்றி இலக்கு 176 ரன்கள்
சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க தயாராகும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ்.
21:35 23-04-2019
20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்துள்ளது. மனீஷ் பாண்டே* 83(49) மற்றும் யூசுப் பதான் 5(4) ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் ஹர்பஜன் இரண்டு விக்கெட்டும், தீபக் சஹார் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
21:31 23-04-2019
மூன்றாவது விக்கெட்டை இழந்த ஹைதராபாத் அணி; விஜய் ஷங்கர் 26(20) ரன்கள் எடுத்த தீபக் சஹார் பந்தில் அவுட் ஆனார்
21:05 23-04-2019
இரண்டாவது விக்கெட்டை இழந்த ஹைதராபாத் அணி; ஹர்பஜன் பந்தில் டேவிட் வார்னர் 57 ரன்கள் எடுத்து அவுட்.
21:00 23-04-2019
அரைசதம் அடித்த டேவிட் வார்னர்* 51(40). இது இவரின் 43வது ஐபிஎல் அரை சதமாகும்.
20:52 23-04-2019
ஒரு விக்கெட் இழப்புக்கு 100 ரன்களை கடந்த ஹைதராபாத் அணி. அரைசதம் அடித்த மனிஷ் பாண்டே* 52(27)
19:42 23-04-2019
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
18:39 23-04-2019
வெற்றி பெறுவது யார்....? மஞ்சள் அணியா? ஆரஞ் அணியா?
IPL 2019 தொடரின் 41-வது லீக் ஆட்டம் சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்க உள்ளது. இப்போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைஸ் ஹைதராபாத் அணிகளும் மோத உள்ளன.
ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணியுடனான கடந்த போட்டியில் படுதோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சென்னை அணி கடைசி இரண்டு போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. அதுவும் கடந்த 17 ஆம் தேதி நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான 33 லீக் ஆட்டத்தில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது சென்னை. எனவே இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணியை வெல்ல வேண்டிய கட்டயாத்தில் தோனி தலைமையிலான சென்னை அணி உள்ளது. மிடில் ஆடரில் வரும் பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடும் பட்சத்தில் சென்னை அணியின் வெற்றி உறுதியாகும்.
அதேவேளையில் ஹைதராபாத் அணியை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அணியின் தொடக்கவீரர்கள் அதிரடியாக விளையடக் கூடியவர்கள். அதேபோல பந்துவீச்சிலும் நன்றாக செயல்பட்டு வருகின்றனர். எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
ஐபிஎல் புள்ளிப்பட்டியலை பொருத்த வரை சென்னை அணி 14 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஹைதராபாத் அணி 10 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உள்ளது.