SRH vs MI: மும்பையின் அதிரடி ஆட்டம் வீண்! வெற்றி பெற்ற ஹைதராபாத்!
SRH vs MI: இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அதிரடி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இன்றைய ஐபிஎல் போட்டி ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இரண்டு அணிகளும் தங்களது முந்தைய போட்டியில் தோல்வியடைந்து இருந்தது, இதனால் இந்த இரண்டு அணிகளும் வெற்றிக்காக இந்த போட்டியில் விளையாடியது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பவுலின் தேர்வு செய்தார். கடந்த போட்டியில் விளையாடாத டிராவிஸ் ஹெட் இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்காக களம் இறங்கினார்.
மேலும் படிக்க | 20 ஓவரில் 277 ரன்கள்! ஐபிஎல்லில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. ஓப்பனிங் பேட்ஸ்மேன் அகர்வால் மட்டும் 11 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு முதல் விக்கெட் இருக்கு ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா மும்பை அணியின் பந்துவீச்சை நாலாபுரமும் சிதறடித்தனர். டிராவிஸ் ஹெட் மூன்று சிக்ஸர்களும், அபிஷேக் சரமா ஏழு சிக்ஸர்களும் விலாசினர். ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களும், அபிஷேக் ஷர்மா 23 பந்துகளில் 63 ரன்களும் குவிக்க சன்ரைச ஹைதராபாத் அணியின் ஸ்கோர் மல மலவென உயர்ந்தது.
அதன் பிறகு களமிறங்கிய மார்க்கம் 28 பந்துகளில் 42 ரன்களும், ஹென்றி க்ளாஸன் 34 பந்திகளில் 80 ரன்கள் குவிக்க சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் குவித்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 263 ரன்கள் அடித்திருந்தது. இந்த ரெக்கார்டை சன்ரைசர்ஸ் அணி இன்று முறியடித்துள்ளது. மும்பை அணி தரப்பில் பும்ராவை தவிர அனைவரும் ரன்களை வாரி வழங்கியிருந்தனர்.
மிகப்பெரிய இலக்கை எதிர்த்து களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடியது. ரோகித் சர்மா மற்றும் ஐசான் கிஷன் சிறப்பாக விளையாடினாலும் அடுத்தடுத்து டிக்கெட் இழந்து வெளியேறினார். அதன் பிறகு நமன் திர் மற்றும் திலக் வர்மா அதிரடியாக விளையாடி மும்பை ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்தனர். ஒரு சமயத்தில் மும்பை அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று விடுமோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் சரியான நேரத்தில் டிக்கெட்டுகளை எடுத்து சன்ரைசர்ஸ் அணி இந்த போட்டியை பக்கம் திருப்பியது. கடைசியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ