Ratan Tata Achievements | டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா செய்த சாதனைகள்!

Ratan Tata Successor: வாகன துறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும் டாடா குடும்பத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 10, 2024, 11:01 AM IST
Ratan Tata Achievements | டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா செய்த சாதனைகள்! title=

The Achievement Of Ratan Tata: பிரபல தொழில் அதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா  வயது மூப்பு காரணமாக மும்பையில் மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை சீராக இல்லை என்று தகவல்கள் வெளியான நிலையில், நேற்றிரவு (புதன்கிழமை) சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கண்ணீர் மல்க அஞ்சலி

அவரது உடலுக்கு மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நவிஸ் மருத்துவமனைக்கு சென்று ரத்தன் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ரிலையன்ஸ் குடும்ப தலைவர் முகேஷ் அம்பானி மருத்துவமனைக்கு சென்று ரத்தன் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவர் உடல் கொலாபாவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் சொல்லப்பட்டது. அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

ஒருநாள் தூக்கம் அனுசரிக்கப்படும் 

பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது உடல் மும்பையில் உள்ள கலைநிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வைக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டி முழுவதும் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

டாடா குழுமத்தில் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா செய்த சாதனைகள் விவரம்

ரத்தன் டாடா பிறப்பு விவரம்

உப்பு விற்பனை, கைக்கடிகாரம், மோட்டார் வாகனத்துறை, விமான நிறுவனம், மென்பொருள் நிறுவனம் என பல்வேறு தொழில்களில் கோளாச்சி வரும் டாடா குழுமத்தை நிறுவிய டாடாவின் கொள்ளு பேரன் தான் ரத்தன் டாடா. அவர் மும்பையில் 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி அன்று நாவல் டாடா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். 

ரத்தன் டாடா கல்வி விவரம்

மும்பை மற்றும் சிம்லாவில் பள்ளி படிப்பை முடித்தார். இவருக்கு பத்து வயது இருக்கும்போதே இவரின் பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். பிறகு பாட்டியின் அரவணைப்பில் ரத்தம் டாடா வளர்ந்திருக்கிறார். 1962 இல் அமெரிக்காவில் கார்னல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலில் பிஎஸ்சி பட்டம் பெற்றார். அதன்பிறகு 1975இல் ஹார்போர்ட் வணிக கல்லூரியில் உயர் மேலாண்மை பட்டம் பெற்றார். 

டாடா குழுமத்தில் ரத்தன் டாடா

அதே ஆண்டில் தேடிவந்த ஐபிஎம் நிறுவனத்தின் வேலைவாய்ப்பை நிராகரித்து விட்டு டாடா குழுமத்தில் இணைந்த ரத்தன் டாடா, ஸ்டீல்ஸ் நிறுவனத்தில் பயிற்சியாளராக தனது பணியை தொடங்கினார். 1971இல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்த நாள்கோ எனப்படும் நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக் நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டார். ரத்தன் டாடாவின் ஆலோசனைகளால் வளர்ச்சி பாதைக்கு திரும்பிய நாள்கோ நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு 2000 கோடி கடந்துள்ளது. 

30 வருட அயராது கடின உழைப்பின் வெற்றிக்கு பின்னர் 1991 ஆம் ஆண்டு ஜெஆர்டி டாடாவிடமிருந்து டாடா குழும தலைவர் பொறுப்பை பெற்றார். அதன்பின் டாடா குழுமத்தின் வணிகங்களை உலகமயமாக்குவதில் அதிக கவனம் செலுத்தினார். முக்கிய வெளிநாட்டு நிறுவனங்களை டாடா குழுமம் கையகப்படுத்தியது. இதன் மூலம் ஒட்டுமொத்த உலகையே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் ரத்தன் டாடா. 

டாடா நானோ கார் அறிமுகம்

இவரது கனவு திட்டமான நானோ கார் 2009 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர் இந்திய குடும்பங்களின் கனவாக இருக்கும் கார் மோகத்தை நினைவாக்கும் விதமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் குறுகிய காலத்திலேயே அதன் உற்பத்தி நின்றுவிட்ட போதும் இந்தியாவில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட மிகக் குறைந்த விலையிலான கார் என்றால் அது டாடா நானோ கார் தான். இதன் மூலம் தனது நிறுவனத்திற்கு மட்டுமின்றி நாட்டுக்காகவும் தொலைநோக்குப் பார்வையை கொண்டவர் என்பதை நிரூபித்தார். 

ஓய்வு பெற்ற ரத்தன் டாடா

டிசம்பர் 2012இல் டாடா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து ரத்தன் டாடா ஓய்வு பெற்றார். அவரது பதவி காலத்தில் டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு வளர்ச்சி அடைந்திருந்தது. 1991இல் வெறும் பத்தாயிரம் கோடியாக இருந்த நிறுவனத்தின் உற்பத்தி மதிப்பு 2012ல் 8 லட்சம் கோடி ரூபாயை கடந்தது. அவருக்கு பின்பு டாடா குழுமத்தின் தலைவராக பதவியேற்ற சைரஸ் மிஸ்டரி பல பிரச்சனைகளுக்கு பின்பு வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, அக்டோபர் 2016 முதல் இடைக்கால தலைவராக ரத்தன் டாடா சிறிது காலம் பணியாற்றினார். டாடா குழுமத்தின் தலைவராக நடராஜன் சந்திரசேகரன் நியமிக்கப்பட்ட நிலையில், ரத்தன் டாடா ஜனவரி 2017 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

மேலும் படிக்க - Tata Salt முதல் Tata Motors வரை: ரத்தன் டாடா எனும் சாம்ராஜ்யம்.. - இனி சாமானியனுக்காக யார் கனவு காண்பார்கள்?

மேலும் படிக்க - விடைபெற்றார் ரத்தன் டாடா: வள்ளலாய் வாழ்ந்த வணிகர், தன்மையான தலைவர்

மேலும் படிக்க - ரத்தன் டாடா வாழ்க்கையை பற்றிய 15 முக்கிய தகவல்கள், எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News