18:52 28-06-2019
49.3 ஓவர் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட் இழந்து 203 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற 204 ரன்கள் தேவை



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

14:50 28-06-2019
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இலங்கை அணி பேட்டிங் செய்ய உள்ளது.


 




செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்: 2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெற உள்ள 35வது லீக் போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி செஸ்ட்டர்-லே-ஸ்ட்ரீட் ‌நகரில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்.


கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி இதுவரை ஆறு போட்டிகளில் பங்கேற்று உள்ளது. அதில் 2 போட்டி‌யில் வெற்றியையும், 2 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. மழையின் காரணமாக இரண்டு போட்டியில் முடிவில்லை. மொத்தம் 6 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு செல்ல முடியும். அதுவும்  மற்ற அணிகளின் செயல்பாட்டை பொறுத்து அரை இறுதிக்கு முன்னேற வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் இலங்கை அணி உள்ளது. 


ஆரம்பத்தில் சொதப்பிய இலங்கை அணி, தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளனர். கடந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ளும் என்ற தெரிகிறது.


தென்னாப்பிரிக்க அணி 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியும், 5 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மொத்தம் 3 புள்ளியுடன் 9 வது இடத்தில் உள்ளது. ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை தென்னாப்பிரிக்க இழந்துவிட்டது. இதனால் ஆறுதல் வெற்றிக்காக ஆட உள்ளது.


சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 76 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் தென்னாப்பிரிக்கா அணி 43 போட்டிகளிலும், இலங்கை அணி 31 போட்டிக‌ளிலும் வெற்றி பெற்றுள்ளன.