தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணியும், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இரண்டு தொடருமே முக்கியமானது என்பதால் இந்திய அணியில் உள்ள திறமையான வீரர்களை தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. இருப்பினும் சில முக்கிய வீரர்களின் காயம் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சில வீரர்கள் இரண்டு தொடர்களையும் இழக்கும் தருவாயில் உள்ளனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் அடைவது பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. முகமது ஷமி 2023 உலக கோப்பைக்கு பிறகு கிரிக்கெட் விளையாடவில்லை. அவரை தொடர்ந்து, ஐபிஎல் 2024ல் சிறப்பாக விளையாடிய 22 வயதான வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், இந்திய அணியில் இடம் பெற்றாலும் காயம் காரணமாக சில போட்டிகளை தவறவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | CSK: பலமான அணியை உருவாக்க... ஏலத்தில் இந்த 3 ஆஸ்திரேலிய வீரர்களை சிஎஸ்கே எடுக்கும்!


சமீபத்தில் நடந்து முடிந்த வங்காளதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தார் மயங்க் யாதவ். மூன்று டி20 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இருப்பினும், தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணியில் மயங்க் யாதவ் பெயர் இல்லை. காயம் காரணமாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐ தரப்பில் இருந்து வெளியான தகவலின்படி, மயங்க் யாதவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதே பிரச்சனை காரணமாக ஐபிஎல் 2024ல் சில போட்டிகளில் அவர் விளையாடவில்லை. ரஞ்சி டிராபியில் யாதவ் விளையாட இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுவது. பிறகு அதில் இருந்தும் விலகினார். ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பையும் இழந்துள்ளார்.


"மயங்க் யாதவிற்கு முதுகில் சில பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வில் இருக்கிறார். ரஞ்சி தொடரின் நான்காவது அல்லது ஐந்தாவது சுற்றில் விளையாட இருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் ஓய்வில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்படுகிறது. மயங்க் யாதவின் தனிப்பட்ட பயிற்சியாளர் தேவேந்திர ஷர்மா பேசியபோது, "மயங்க் அடுத்த சில மாதங்கள் ஓய்வில் இருப்பது நல்லது. பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர் இடம் பெற வேண்டும். தற்போது அவருக்கு புதிய காயம் எதுவும் இல்லை, எனவே இப்போது விளையாட வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தேவேந்திர ஷர்மா கூறினார்.


தென்னாபிரிக்கா செல்லும் இந்திய அணி:


சூர்யகுமார் யாதவ் (C), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), ரின்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (WK), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக் , அவேஷ் கான், யாஷ் தயாள்.


ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி:


இந்திய அணி: ரோஹித் சர்மா (C), ஜஸ்பிரிட் பும்ரா (WK), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த் (WK), சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (WK), ஆர் அஷ்வின், ஆர் ஜடேஜா , முகமது. சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர்


இருப்பு: முகேஷ் குமார், நவ்தீப் சைனி, கலீல் அகமது


மேலும் படிக்க | ஐபிஎல் 2025ல் சிஎஸ்கே டார்கெட் செய்யும் 27 வயது விக்கெட் கீப்பர்! யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ