Duleep Trophy 2024: இந்திய கிரிக்கெட் அணி ஒரு பெரிய டெஸ்ட் சீசனுக்காக தயாராகி வருகிறது. டெஸ்ட் அணியில் நிலவும் பிரச்னைகளை தீர்த்து இந்த முறையாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை பெற வேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. 10 டெஸ்ட் போட்டிகள் அடுத்த ஜனவரி மாதத்திற்கு இந்தியா விளையாட உள்ளது. அதில் 5 போட்டிகள் உள்நாட்டில், 5 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படியிருக்க, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிறப்பாக செயல்படும் முதன்மையான அணியை பலமடைய செய்வது முக்கியமானது. அதற்காகவே, துலிப் டிராபி தொடரை ஒரு சிறந்த வாய்ப்பாக பிசிசிஐ பார்க்கிறது. இந்த உள்ளூர் தொடரில் தங்களது திறனை வெளிக்காட்டும் வீரர்களையே இந்திய அணிக்கு தேர்வு செய்வோம் என வெளிப்படையாக தேர்வுக்குழு அறிவித்திருக்கிறது. அப்படியிருக்க இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் துலிப் டிராபியை மிகுந்த தீவிரமாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். 


பலமான ஏ அணி...!


மொத்தம் நான்கு அணிகள், நாக்-அவுட் போட்டிகள் இல்லாத ரவுண்ட் ராபின் முறையில் இந்த தொடரில் விளையாட உள்ளன. நான்கு அணிகளுக்கான ஸ்குவாட்களை பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்தது. சுப்மான் கில் தலைமையில் ஏ அணியும் (Team A), அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் பி அணியும் (Team B), ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சி அணியும் (Team C), ஷர்யாஸ் ஐயர் தலைமையில் டி அணியும் (Team D) விளையாட உள்ளன.


மேலும் படிக்க | இந்திய அணிக்கு பலம் சேர்க்கப்போவது இவர்கள் தான்...! துலிப் டிராபியின் முக்கிய வீரர்கள் யார் யார்?


அனைத்து அணிகளிலும் ஏ அணியும், பி அணியும் சற்று பலம் வாய்ந்ததாக தெரிகின்றனது. காரணம் அந்த அணிகளில்தான் மூத்த வீரர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர். அதிலும், ஏ அணி மிகுந்த பலம் வாய்ந்த ஒன்றாக தெரிகிறது. மூத்த வீரர்கள் பலர் இருந்தாலும் அந்த அணிக்கு இளம் வீரரான சுப்மான் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை மூன்று பார்மட்டுக்கான வீரராக மட்டுமின்றி ஒரு கேப்டன்ஸி மெட்டீரியலாகவும் பிசிசஐ பார்க்கிறது. ஓடிஐ மற்றும் டி20 அணிக்கு சுப்மான் கில் (Shubman Gill) துணை கேப்டனாக உள்ள நிலையில் தற்போது துலிப் டிராபியில் கேப்டன் பொறுப்பை பெற்றிருப்பது பலருக்கும் ஆச்சர்யம் அளித்துள்ளது. 


ஏ அணியில் இருப்பது யார் யார்?


துலிப் டிராபி தொடர் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்குகிறது. ஆந்திராவின் அனந்தபூர் மற்றும் பெங்களூரு சின்னசாமி மைதானங்களில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 6 போட்டிகளில் 17 நாள்களில் நடைபெறுகிறது. இதில் ஏ அணி செப். 5ஆம் தேதி பி அணியுடனும், செப். 12ஆம் தேதி டி அணியுடனும், செப். 19ஆம் தேதி டி அணியுடனும் மோதுகின்றது. இதில் ஏ அணியின் ஸ்குவாட் (Team A Full Squad) மற்றும் அவர்களின் முதன்மையான பிளேயிங் லெவனை (Team A Playing XI) இங்கு காணலாம். 


ஏ அணி ஸ்குவாட்: சுப்மான் கில், மயங்க் அகர்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், கே.எல். ராகுல், திலக் வர்மா, சிவம் துபே, தனுஷ் கோட்டியான், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, ஆவேஷ் கான், வித்வத் கவேரப்பா, குமார் குஷாக்ரா, ஷஸ்வத் ரவாத்.


மேலும் படிக்க | ஷமியால் வாழ்க்கை பெறப்போகும் இந்த 3 பாஸ்ட் பௌலர்கள் - பிரகாசமாகும் இந்திய அணியின் எதிர்காலம்


யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்?


செப். 19ஆம் தேதி தொடங்கும் இந்தியா - வங்கதேச டெஸ்ட் தொடருக்கு தேர்வாகும் வீரர்களுக்கு பதில் மாற்று வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களே டெஸ்ட் அணிக்கு தகுதிபெறுவார்கள் என்பதால் முதன்மையான பிளேயிங் லெவன் தேர்விலும் முக்கிய வீரர்களுக்கே வாய்ப்பளிக்கப்படும். 


அந்த வகையில், சுப்மான் கில், மயங்க் அகர்வால் ஆகியோர் ஓப்பனிங் இறங்குவார்கள். கே.எல். ராகுல், திலக் வர்மா, ரியான் பராக், சிவம் தூபே ஆகியோர் பேட்டிங்கில் நிச்சயம் இடம்பெறுவார்கள். சுழற்பந்துவீச்சில் ரியான் பராக்கும் கைக்கொடுப்பார் என்பதால் குல்தீப் யாதவ், தனுஷ் கோட்டியான் ஆகியோருக்கு வாய்ப்பு உறுதி எனலாம். மீதம் உள்ள மூன்று பேரில் பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, ஆகாஷ் தீப் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். 


துருவ் ஜூரேல் நிலைமை?


இவர்களே ஏ அணியின் முதன்மையான பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள், அதாவது இவர்களுக்கு இந்தியா - வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும். கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங்கிலும் ஈடுபடுவார் என்றாலும் காயத்தில் கருத்தை கொண்டு வேறு ஒரு விக்கெட் கீப்பர் பேட்டரையும் இதில் இவர்கள் முயற்சித்து பார்க்க வாய்ப்புள்ளது. 


மிடில் ஆர்டரில் திலக் வர்மாவுக்கு பதில் துருவ் ஜூரேல் வாய்ப்பை பெறலாம். அதேபோல், பிரசித் கிருஷ்ணா உடற்தகுதியும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை அவருக்கு வாய்ப்பு கிடைக்காதபட்சத்தில் ஆவேஷ் கான், வித்வத் கவேரப்பாவை முயற்சிக்கலாம், ஆனால் இவை அனைத்தும் யோசனைதான் என்றாலும் கீழே கொடுக்கப்பட்ட வீரர்களே முதன்மையான பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்பிருக்கிறது.  


ஏ அணி பிளேயிங் லெவன் (கணிப்பு): சுப்மான் கில், மயங்க் அகர்வால், கே.எல். ராகுல், திலக் வர்மா (அ) துருவ் ஜூரேல், ரியான் பராக், சிவம் தூபே, தனுஷ் கோட்டியான், குல்தீப் யாதவ், கலீல் அகமது, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா.


மேலும் படிக்க | வங்கதேச டெஸ்டில் ஜாகீர்கான் சாதனையை முறியடிக்கப்போகும் அஸ்வின்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ