வங்கதேச டெஸ்டில் ஜாகீர்கான் சாதனையை முறியடிக்கப்போகும் அஸ்வின்..!

Ravichandran Ashwin : வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அடுத்த மாதம் விளையாடும் ரவிசந்திரன் அஸ்வின் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கானின் சாதனையை முறியடிக்க உள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 16, 2024, 02:53 PM IST
  • வங்கதேச தொடரில் சாதிக்கப்போகும் அஸ்வின்
  • ஜாகீர்கானின் சாதனையை முறியடிக்க உள்ளார்
  • பாட் கம்மின்ஸ் சாதனையும் தகர்க்க வாய்ப்பு
வங்கதேச டெஸ்டில் ஜாகீர்கான் சாதனையை முறியடிக்கப்போகும் அஸ்வின்..! title=

Ravichandran Ashwin : இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19 முதல் தொடங்குகிறது. சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்தத் தொடரில், டெஸ்ட் கிரிக்கெட் பாயிண்ட்ஸ் டேபிளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணியை எதிர்கொள்வது வங்கதேச அணிக்கு நிச்சயம் சவாலாக இருக்கும். இந்த சூழலில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் அடுத்த சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார். அவர் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர்கானின் சாதனையை முறியடிக்கவும் வாய்ப்புள்ளது. 

அஸ்வின் படைக்கப்போகும் சாதனை

இப்போதைய டெஸ்ட் கிரிக்கெட் பார்மேட்டில் உலகின் தலைச்சிறந்த சுழற்பந்துவீச்சாளராக அஸ்வின் இருக்கிறார். அவர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கும்பட்சத்தில் நிச்சயம் ஜாகீர்கானின் சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜாகீர்கான் 31 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். 25 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இஷாந்த் சர்மா உள்ளார். இந்த இருவரின் சாதனைகளையும் அஸ்வின் முறியடிக்க வாய்ப்புள்ளது.

அஸ்வின் வங்கதேசதுக்கு எதிரான ரெக்கார்டு

ரவிசந்திரன் அஸ்வின் தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் கேரியரில் வங்கதேச அணிக்கு எதிராக இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நடைபெற இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விளையாடினால் நிச்சயம் 9 விக்கெட்டுகளை வீழ்த்திவிடுவார். ஏனென்றால் சென்னை அவருக்கு சொந்த மைதானம். இந்தியாவில் எந்த மைதானத்தில் அவர் விளையாடினாலும் சிறப்பாக பந்துவீசக்கூடியவர் அஸ்வின். அதனால் இந்த டெஸ்ட் போட்டியில் புதிய சாதனையை படைக்க இருக்கிறார் அஸ்வின். 

மேலும் படிக்க | ரோகித், கம்பீர் செய்யும் தவறால் அஸ்தமனமாகும் 4 கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலம்..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அஸ்வின் ரெக்கார்டு

2019ஆம் ஆண்டு தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் (WTC) அஸ்வின் இதுவரை 35 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் முதலிடத்திலும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 2-வது இடத்திலும் உள்ளனர். லையன் 43 போட்டிகளில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கம்மின்ஸ் 42 போட்டிகளில் 175 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அஸ்வின் இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் அவர் கம்மின்ஸை முந்திவிடுவார். லையன் சாதனையை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 14 விக்கெட்டுகள் தேவை.

அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் சாதனை

அஸ்வின் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 516 விக்கெட்டுகளுடன் 3309 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் அவர் எட்டாவது இடத்தை அடைய வாய்ப்புள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கோர்ட்னி வால்ஷ் 132 போட்டிகளில் 519 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால், அவரை முந்திவிடுவார் ரவிசந்திரன் அஸ்வின்.

மேலும் படிக்க | இந்திய அணிக்கு பலம் சேர்க்கப்போவது இவர்கள் தான்...! துலிப் டிராபியின் முக்கிய வீரர்கள் யார் யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News