சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான நம்பர் 3-ல் இறங்குவதற்கு பதிலாக 4 அல்லது 5வது இடத்தில் இறக்கினால் இந்தியாவுக்குச் சிறந்ததாக அமையும் என்று ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெய்ப்பூரில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 ஐ தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து நிர்ணயித்த 165 ரன்கள் இலக்கை இந்தியா அணி அடிப்பதற்கு சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 62 ரன்கள் அடித்தது மிகவும் உதவிகரமாக அமைந்தது.  3-வது இடத்தில் பேட்டிங் செய்த சூர்யகுமார், கேப்டன் ரோகித் சர்மாவுடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 59 ரன் பார்ட்னர்ஷிப்பில் இணைந்து தனது அரை சதத்தையும் அடித்தார்.   17வது ஓவரில் ஆட்டமிழந்தாலும், சூர்யகுமாரின் பேட்டிங் இந்திய அணிக்கு பெரிதும் உதவியது.  


ALSO READ ஐபிஎல் 2022ல் பங்கேற்பது பற்றி தோனி கூறிய பதில்!


இதுவரை ஒன்பது டி20 சர்வதேசப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள சூர்யகுமார், மூன்று அரைசதங்கள் அடித்து 48.60 சராசரியில் 243 ரன்கள் குவித்துள்ளார்.  இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் தற்போது இந்திய டி20 அணியில் தனது  இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.  முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா, சூர்யகுமார் தனது வழக்கமான நம்பர்.3ல் இறங்குவதற்கு பதிலாக, 4 அல்லது 5ல் இறக்கினால், இந்தியாவுக்குச் சிறந்ததாக அமையும் என்று கூறியுள்ளார்.



சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய உத்தப்பா, "சூர்யகுமார் பன்முகத் திறமையையும், பேட்டிங்கில் எந்த நிலையிலும் இறங்க கூடியவர்.  நான் அவரை நம்பர் 5 மற்றும் 6ல் விளையாடி பார்த்திருக்கிறேன். அந்த இடத்திலும் அவர் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார். சூர்யகுமார் 5வது இடத்தில் விளையாடுவது ரிஷப் பந்திற்கும் உதவிகரமாக அமையும்.  


ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற ஒருவர் நம்பர் 3ல் நன்றாகப் பொருந்துவார் என்று நினைக்கிறேன், ஏனென்றால் அவர் செட்டில் ஆக சிறிது நேரம் எடுத்து கொள்வார். ஆனால் சூர்யாகுமார் எடுத்த உடனே அதிரடியாக ஆட கூடியவர்.  எனவே அவரை நம்பர் 4 அல்லது 5ல் பேட் செய்ய வைக்க வேண்டும்.  ஏனெனில் இந்தியாவுக்கு ஒரு ஃபினிஷர் அதுவும் நம்பகமான ஃபினிஷர் தேவை. இந்த சிறிய மாற்றங்கள் உலகக் கோப்பையை நோக்கி முன்னேறும் போது, ​​ரிஷப் பந்த் போன்ற மற்ற வீரருக்கும் உதவியாக இருக்கும் என்று உத்தப்பா கூறியுள்ளார்.


ALSO READ ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு செல்ல இந்தியாவிற்கு வாய்ப்பு!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR