ஐபிஎல் 2022ல் விளையாடுவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் அதிக நாட்கள் இருப்பதால் இப்போது அதைப் பற்றி யோசிக்க தேவையில்லை. ஐபிஎல் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது, தற்போது நவம்பர் மாதமே வந்துள்ளது. இன்னும் ஏப்ரல் மாதம் வருவதற்கு அதிக நாட்கள் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
ALSO READ டி20 தொடரில் இருந்து விராட் கோலி விலகியது சரியான முடிவா?
ஐபிஎல் 2021ல் கோப்பையை வென்ற பிறகு அடுத்த ஆண்டு ஐபிஎல்-ல் விளையாடுகிறீர்களா என்ற கேள்விக்கு சூசகமாக பதில் சொல்லியிருந்தார் தோனி. நான் இன்னும் சிஎஸ்கே அணியை விட்டு விலகவில்லை, அடுத்த ஆண்டு விளையாடுவது பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். தோனி அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்றே பரவலான கருத்து இருந்து வருகிறது. மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல்-ல் புதிதாக இரண்டு அணிகள் விளையாட உள்ளது.
"அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் நான் விளையாடுவது பிசிசிஐ கையில்தான் உள்ளது. 2 புதிய அணிகள் வர உள்ளன. சிஎஸ்கே அணிக்கு எது சிறந்தது என்றே முடிவெடுக்க வேண்டும். நான் அணியில் இருப்பது முக்கியம் இல்லை, சிஎஸ்கே அணியை எவ்வாறு பலப்படுத்த வேண்டும் என்றே பார்க்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளுக்கு அணிக்கு எது சிறந்தது என்பதை அணி நிர்வாகம் முடிவு செய்யும்" என்று கூறியுள்ளார். சிஎஸ்கே அணி கோப்பையை வென்றதற்கு நேற்று சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
ALSO READ நாங்க வேற மாறி! நியூ. அணியை ஆல் அவுட் செய்து வெற்றி பெற்றது இந்தியா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR