ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு செல்ல இந்தியாவிற்கு வாய்ப்பு!

வரும் 25ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற உள்ளது.  இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கபட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2021, 03:10 PM IST
  • இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
  • முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கபட்டுள்ளது. மேலும், ரோஹித் சர்மா, பந்த், பும்ராஹவிற்கும் ஓய்வு அளிக்கபட்டுள்ளது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு செல்ல இந்தியாவிற்கு வாய்ப்பு! title=

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் 2-0 என்று வெற்றி பெற்றால் இந்திய அணி டெஸ்ட் ஐசிசி ரேங்கிங்கில் முதல் இடத்திற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.  இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.  நடந்து முடிந்த டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.  உலக கோப்பை போட்டியில் இந்தியாவை நியூஸிலாந்து வென்றிருந்தது. 

ALSO READ ஐபிஎல் 2022ல் பங்கேற்பது பற்றி தோனி கூறிய பதில்!

வரும் 25ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற உள்ளது.  இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கபட்டுள்ளது.  முதல் டெஸ்ட் போட்டியில் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கபட்டுள்ளது.  மேலும், ரோஹித் சர்மா, பந்த், பும்ராஹவிற்கும் ஓய்வு அளிக்கபட்டுள்ளது.  டி20 தொடரில் ஓய்வில் இருந்த வில்லியம்சன் டெஸ்ட் தொடரில் கலந்து கொள்ள உள்ளார்.  இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்திற்கு செல்லும்.  தற்போது முதல் இடத்தில் நியூஸிலாந்து அணியும், இரண்டாவது இடத்தில் இந்திய அணியும் உள்ளது.  

jadeja

2018-ல் இருந்து இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  3 வருடத்தில் நடந்த 8 தொடரில் 7ல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.  அதிலும் இந்தியாவை தோற்கடித்த அணி நியூஸிலாந்து.  மேலும் டெஸ்ட் சாம்பியன்சிப் பைனல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியுள்ளது நியூஸிலாந்து.  முக்கியமான வீரர்கள் இல்லாத இந்த அணியை கொண்டு ரஹானே தலைமையில் பலம் வாய்ந்த நியூ.அணியுடன் மோத உள்ளது இந்தியா.  ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஆல்ரவுண்டர் பட்டியலில் அஸ்வின் 5வது இடத்திலும், ஜடேஜா 3வது இடத்திலும் உள்ளனர்.  

இந்திய அணி: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, விருத்திமான் சாஹா (வி.கே), அக்சர் படேல், ஆர்.அஷ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, கே.எஸ்.பரத் (WK) , ரவீந்திர ஜடேஜா.

ALSO READ நாங்க வேற மாறி! நியூ. அணியை ஆல் அவுட் செய்து வெற்றி பெற்றது இந்தியா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News