T20 கிரிக்கெட்டின் உற்சாகத்தை தொடக்க வீரர்கள் கெடுக்கிறார்கள்! - கிறிஸ் கெய்ல் குற்றச்சாட்டு!!
டி20 தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் மெதுவாக விளையாடி, `பொழுதுபோக்கைக் சாகடித்துவிட்டதாகவும்` கெய்ல் கூறுகிறார்.
அபுதாபி: உலக விளையாட்டுகளில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த விளையாட்டின் மீதான விமர்சனங்களும், பாராட்டும் எப்போதும் தொடர்வதுதான். ஆனால், சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு கிரிக்கெட்டர் சக வீரர்களைப் பற்றி கருத்து கூறும்போது அது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகிறது.
பிரபல கிரிக்கெட்டர் கிறிஸ் கெய்ல் அண்மையில் முன்வைத்த ஒரு கருத்து, குற்றச்சாட்டாகவே பார்க்கப்படுகிரது. தற்போதைய தலைமுறை டி20 தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் மெதுவாக இருப்பதாகவும், 'பொழுதுபோக்கைக் சாகடித்துவிட்டதாகவும்' கெய்ல் கூறுகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரர் கிறிஸ் கெய்ல், டி20 கிரிக்கெட்டில், பவர் ப்ளேக்களில் தங்கள் எச்சரிக்கையான அணுகுமுறையால், நவீன கால தொடக்க ஆட்டக்காரர்கள் "உற்சாகமான பொழுதுபோக்கைக் கொல்வதாக" விமர்சித்துள்ளார்.
அதனால், தற்போது டி10 போட்டிகள், மிகவும் உற்சாகத்தைக் கொடுத்து, அருமையான பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என்றும், அது விளையாட்டில் புதிய தரத்தை உருவாக்குவதாகவும் கிறிஸ் கெய்ல் (Chris Gayle) கூறுகிறார்.
"டி20 கிரிக்கெட்டின் இந்த அம்சம்தான், டி 10 கிரிக்கெட்டின் தொடக்கத்திற்கு காரணம் என்று நான் நினைக்கிறேன். ஆச்சரியப்படும் வகையில் டி 20 கிரிக்கெட் மெதுவாகிவிட்டது, அதனால், டி 10 கிரிக்கெட் இப்போது சிறிது சிறிதாக தனக்கான இடத்தை உருவாக்கி வருகிறது" என்று கெய்ல் தெரிவித்துள்ளார்.
ALSO READ | IND vs NZ, 1st Test Day 2: இந்தியா 345 ரன்களுக்கு ஆல் அவுட், அதிகபட்சமாக ஸ்ரேயஸ் 105
"டி20 கிரிக்கெட்டில், தொடர்க்க ஆட்டக்காரர்கள் பொழுதுபோக்கைக் சாகடித்து விடுகின்றனர். ஏனென்றால் முதல் ஆறு ஓவர்களில், தொடக்க ஆட்டக்காரர்களாக நாம் அதிகமாக ரன்களைப் பெற முடியும், ஆனால் அதற்கு அவர்கள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள்” என்கிறார் கெய்ல்.
"சில நேரங்களில் அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்கோரைப் பெறவேண்டும் என்பதற்காக பேட் செய்கிறார்கள், அதனால் அவர்கள் முதல் ஆறு ஓவர்களில் பேட்டிங்கில் கொண்டு வர வேண்டிய உற்சாகத்தையும் உத்வேகத்தையும் நீர்த்துப் போக செய்து விடுகிறார்கள். ஆனால் T10 சிறப்பாக உள்ளது, T10 போட்டிகள் (T10 cricket) இன்னும் உற்சாகமாகவும், பொழுதுபோக்காவும் இருக்கும்" என்று கிறிஸ் கெய்ல் கூறுகிறார்.
சவுதி அரேபியாவில் (UAE) நடைபெற்ற T20 உலகக் கோப்பையின் (T20 World Cup) போது, பவர் ப்ளேகளில் பேட்டர்கள் பெரும்பாலும் ஒரு எச்சரிக்கையான அணுகுமுறையைக் கடைப்பிடித்தனர்.
இதுபற்றி கூறும் கெய்ல், "முதல் 6 ஓவர்களில் பேட்டர்கள் ஏன் மந்தமாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. டி20 கிரிக்கெட் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், முதல் பந்திலிருந்து பேட்டர்கள் சுவாராசியத்தை ஏற்படுத்தினார்கள். ஆனால், அது இப்போது இல்லை” என்று சொல்கிறார்.
"எனக்கு தற்போதைய நிலை பிடிக்கவில்லை, நாம் கடினமாக விளையாட வேண்டும், டி20 கிரிக்கெட் விளையாட்டிற்குள் இருக்கும் பொழுதுபோக்கே, அதிரடியாக அடித்து ஆடுவதுதான். முதல் ஆறு ஓவர்களில் அந்த ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று கருதுகிறார் கெயில்.
தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 போட்டிகளில், கெய்லின் அபுதாபி அணி, ஐந்து போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்று தர வரிசையில் முதலிடத்தில் உள்ளது.
ஜமைக்காவை சேர்ந்த 42 வயதான கிறிஸ் கெய்ல், அபுதாபி அணி தங்கள் முதல் T10 பட்டத்தை இந்த ஆண்டு வெல்லும் என்று உறுதியாக நம்புகிறார்.
READ ALSO | 71வது சதத்திற்காக கடுமையான பயிற்சியில் விராட் கோலி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR