T20 World cup: ரோகித் சர்மாவுக்கு பந்துவீசிய 11வயது இளம் சிறுவன்
11 வயது இளம் சிறுவனின் பந்துவீச்சில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
2022 டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. இந்தியல அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் தீவிரமாக வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, 11 வயது இளம் பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் கேப்டன் ரோகித் சர்மா வலை பயிற்சி செய்தார். இந்த புகைப்படத்தை பிசிசிஐ டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ரோஹித்துக்கு பந்துவீசிய சிறுவன்
இந்திய அணி பிரிஸ்பேன் செல்வதற்கு முன்பு பெர்த்தில் பயிற்சியில் ஈடுபட்டது. அப்போது 11 வயது இளம் பந்து வீச்சாளர் த்ருஷில் சவுகான் பந்துவீசுவதைக் பார்த்தார். அவரது பந்துவீச்சை ரசித்த கேப்டன் ரோகித் சர்மா, துருஷில் சவுகானை இந்திய டிரஸ்ஸிங் அறைக்கு அழைத்து உற்சாகப்படுத்தினார்.
பின்னர் அவரை அழைத்துச் சென்று வலைபயிற்சியில் ஈடுபட்டார் ரோகித். இடது கை பந்துவீச்சாளரான துருஷில் சவுகான், இன்சுவிங் யார்க்கர் போடுவது தனக்கு விருப்பம் என கூறியுள்ளார். அவுட்சுவிங் வீசவும் தெரியும் எனத் கூறினார். அவரது பந்துவீச்சில் சிறிது நேரம் பயிற்சி எடுத்த ரோகித் சர்மா, பின்னர் அவருக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து வாழ்த்தியுள்ளார்.
மேலும் படிக்க | பிசிசிஐ-ல் இருந்து வெளியேறிய பிறகு சவுரவ் கங்குலி எடுத்த முக்கிய முடிவு!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி
டி20 உலகக் கோப்பை 2022ல், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 23ஆம் தேதி விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன், பிரிஸ்பேனில் இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. பெர்த்தில் இரண்டு அதிகாரப்பூர்வமற்ற பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடியது. அதில் இந்தியா ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை சந்தித்தது.
மேலும் படிக்க | ரோகித்தின் ஹிட் லிஸ்டில் இளம் வேகப்பந்து வீச்சாளர்; இந்திய அணி வாய்ப்பு இனி கஷ்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ