ரோகித்தின் ஹிட் லிஸ்டில் இளம் வேகப்பந்து வீச்சாளர்; இந்திய அணி வாய்ப்பு இனி கஷ்டம்

இந்திய அணியில் இடம்பிடித்த இளம் வேகப்பந்துவீச்சாளர், வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் ரோகித் சர்மாவின் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 16, 2022, 09:04 AM IST
  • ரோகித் சர்மாவின் கோபம்
  • இளம் வீரருக்கு வாய்ப்பில்லை
  • மீண்டும் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம்
ரோகித்தின் ஹிட் லிஸ்டில் இளம் வேகப்பந்து வீச்சாளர்; இந்திய அணி வாய்ப்பு இனி கஷ்டம் title=

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருக்கும் நிலையில், இளம் வீரர் ஒருவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் கூட சேர்க்கப்படவில்லை. கேப்டன் ரோகித் சர்மாவின் ஹிட் லிஸ்டில் அவர் இடம்பிடித்திருப்பதால், அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது மிகவும் கடினம் என கூறப்படுகிறது. 

ஆவேஷ்கான் நீக்கம்

டி20 உலகக் கோப்பை 2022-க்கான, இந்திய அணியின் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 2022 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த அவேஷ் கான் தேர்வு செய்யப்படவில்லை. இளம் வேகப்பந்து வீச்சாளரான அவேஷ் கான், ஆசிய கோப்பையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்று வரும் அவர், தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. 

மேலும் படிக்க | 'விராட் கோலியை பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்' - டிரெண்டிங்கால் கொந்தளித்த ரசிகர்கள் - ஏன் தெரியுமா?

ஆசிய கோப்பையில் மோசமான ஆட்டம்

ஆசிய கோப்பை 2022ல், அவேஷ் கான், இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக 2 ஓவர்களில் 19 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்திய அவர், ஹாங்காங்கிற்கு எதிராக, 4 ஓவர்களில், 53 ரன்களை விட்டுக்கொடுத்தார். கத்துக்குட்டி அணிக்கு எதிராக கூட சிறப்பாக செயல்படாத காரணத்தால், அவரை அணியில் இருந்து நீக்கியுள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.

இந்திய அணியில் வாய்ப்பு

அவேஷ் கான் ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் இந்திய அணியில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் காயம் அடைந்ததால் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணிக்காக இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த போட்டிகளில், அவேஷ் கான் 9.10 என்ற பொருளாதாரத்தில் ரன்களை கொடுத்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் படிக்க | இன்ஸ்டாகிராமில் கோடிகளை அள்ளும் விராட் கோலி; முன்னணி பிரபலங்களை பின்னுக்கு தள்ளினார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News