டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்காக ஓப்பனிங் இறங்கும் விராட் கோலி - ரோகித் சர்மா ஜோடி இப்போது சிக்கலில் இருக்கிறது. இருவரும் ஒரு போட்டியில் கூட சிறப்பான பார்ட்னர்ஷிப்பை கொடுக்கவில்லை. அதனால் இவர்கள் இருவரும் ஓப்பனிங் இறங்குவதற்கு பதிலாக பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் ஜெய்ஷ்வால் பிளேயிங் லெவனுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தினர். இந்த விமர்சனங்களை புறகணிக்கவும் முடியாது. ஏனென்றால், ரோகித் சர்மா - விராட்கோலி டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் மிக மிக சொற்ப ரன்களை மட்டுமே பார்ட்னர்ஷிப்பாக கொடுத்திருக்கின்றனர்.

 


 

இது இந்திய அணி நிர்வாகத்திற்கு தெரிந்திருந்தாலும், அவர்களை ஓப்பனிங் ஸ்லாட்டில் இருந்து மாற்ற வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறது. இனி வரும் அனைத்து போட்டிகளும் மிக முக்கியமான போட்டிகள் என்பதால், இப்படி சின்னதாக செய்யும் மாற்றம் ஏதேனும் பெரிய சர்ச்சையில் சென்று முடியவும் வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறது இந்திய அணி. அதனால், விராட் கோலி, ரோகித் சர்மாவே ஓப்பனிங் இறங்கட்டும், அவர்களும் எந்த நேரத்திலும் இந்திய அணிக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள் என்பதால், அவர்கள் இடத்தை காலி செய்ய வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறது.

 

அதேநேரத்தில் ஷிவம் துபே இடம் மட்டும் ஊசலாட்டத்தில் இருக்கிறது. அவருக்கு பதிலாக ஜெய்ஷ்வால் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவரை பிளேயிங் லெவனில் விளையாட வைக்கலாம். ஆனால், அப்படியான பிளானும் ரோகித் சர்மாவிடம் இல்லை. வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் சொதப்பும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவுலிங்கைப் பொறுத்த வரை பும்ரா, அர்ஷ்தீப், குல்தீப், அக்சர், ஜடேஜா ஆகியோர் இருக்கின்றனர். அதனால், வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் கடந்த போட்டியில் ஆடிய இந்திய அணியே களம் இறங்கும் என்பது உறுதியாகியுள்ளது.

 

இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்,

 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ