T20 World Cup: இந்தியாவை விட்டு செல்கிறதா டி-20 உலகக் கோப்பை? கொரோனா எதிரொலி?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனைத்து வழிகளையும் ஆராய்ந்துவரும் அதே வேளையில், ICC T20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறாவிட்டால், அது இந்திய ரசிகர்களுக்கு ஒரு பெரிய பின்னடைவாகவும் ஏமாற்றமாகவும் இருக்கும்.
இந்தியாவில் கோவிட் -19 தொற்றுநோய் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ICC T20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், இந்தியாவில் இந்த போட்டிகளை நடத்த முடியுமா என்ற கேள்வி தற்போது எழும்பியுள்ளது.
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இந்த நிகழ்வுக்கான மாற்று இடமாக காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளது. ஆங்கில செய்தித்தாள் டெய்லி மெயிலின் ஒரு அறிக்கையின்படி, இந்தியாவில் உள்ள தற்போதைய COVID-19 சூழ்நிலை மேம்படவில்லை என்றால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ICC T20 உலகக் கோப்பை (T20 World Cup) நடக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனைத்து வழிகளையும் ஆராய்ந்துவரும் அதே வேளையில், ICC T20 உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறாவிட்டால், அது இந்திய ரசிகர்களுக்கு ஒரு பெரிய பின்னடைவாகவும் ஏமாற்றமாகவும் இருக்கும்.
"ஐ.சி.சி (ICC) தூதுக்குழு தற்போது இந்தியாவில் உள்ளது. அக்டோபர் மாதம் நடுப்பகுதியில் துவங்கி சுமார் ஒரு மாத காலம் நடக்கவிருக்கும் உலகக் கோப்பைக்கு ஒன்பது மைதானங்களை இந்த குழு பரிந்துரைத்தது. இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான, 130,000 இருக்கை திறன் கொண்ட அகமதாபாத் மைதானத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கிலாந்து இந்தியா வந்தபோது இங்கு பல போட்டிகள் விளையாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, டி -20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் 2020 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடக்கும் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொற்றுநோயை மனதில் வைத்து ஐ.சி.சி அதை ஒத்திவைத்தது. இந்த இடைவெளியை பயன்படுத்திக்கொண்ட BCCI, அந்த நேரத்தில் IPL போட்டிகளை நடத்தியது.
2020 ஆம் ஆண்டில், BCCI-க்கு IPL போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் உதவியது. தொற்றுநோய் காலத்தில் யாரும் எதிர்பாராத வகையில் 2020 ஆம் ஆண்டு IPL மிகுந்த வெற்றி பெற்றது.
கோவிட் -19 தடுப்பூசி குறித்து வீரர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - BCCI
இதற்கிடையில், மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி போடுவதற்கான செயல்முறையை இந்திய அரசு துவக்கவுள்ளது. இந்த நிலையில், இந்தியன் பிரீமியர் லீக்கின் 14 வது பதிப்பில் விளையாடிக்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது இப்போது அனைவரது கவனமும் உள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றிய முடிவு கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட முடிவாக இருக்கும் என BCCI கூறியுள்ளது.
செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-யிடம் பேசிய பி.சி.சி.ஐ வட்டாரம், மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்குமான சதடுப்பூசி செயல்முறை துவங்கியவுடன் தடுப்பூசி செலுத்திக்கொள்வது குறித்து வீரர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். “இந்திய வீரர்கள் சனிக்கிழமை முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இது வீரர்கள் எடுக்க வேண்டிய முடிவு" என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
தற்போது ஐ.பி.எல். இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இருப்பதால் வெளிநாட்டு வீரர்களுக்கும் விதிவிலக்கு அளிக்க முடியுமா என்று கேட்டதற்கு, “இந்திய வீரர்களுக்கு மட்டுமே இங்கு தடுப்பூசி செலுத்த முடியும்.” என்று கூறப்பட்டுள்ளது.
ALSO READ: IPL 2021 போட்டிகளில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் அஸ்வின்; காரணம் என்ன
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR