T20 World cup: ஒரே ஓவரில் மேட்சை மாற்றிய ஷமி; விராட் கோலியின் அபார கேட்ச் - இந்தியா வெற்றி
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஷமி வீசிய கடைசி ஓவரில் 4 விக்கெட்டுகள் விழுந்ததால், இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடங்கியுள்ளது. இந்திய அணி, முதலாவது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது. பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா நிதானமாக விளையாட, கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடினார். 33 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் 57 ரன்களை விளாசினார். இதில் 3 சிக்சர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். ரோகித் 15 ரன்களுக்கும், கோலி 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.
மேலும் படிக்க | கோவிட் தொற்று இருந்தாலும் டி20 உலகக் கோப்பையில் விளையாட அனுமதி!
மிடில் ஆர்டரில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் சிக்சர் பவுண்டரிகளாக அடித்து 50 ரன்கள் விளாச, தினேஷ் கார்த்திக் தனது பங்குக்கு 20 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, அதிரடியாக விளையாடி இந்திய அணிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இவ்வளவு நாள் ஃபார்மில் இல்லாமல் இருந்த பின்ச் இந்தியாவுக்கு எதிராக ஃபார்முக்கு வந்தார். அதிரடியாக விளையாடிய அவர், 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவருக்கு பக்கபலமாக விளையாடிய மார்ஷ் 35 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி இருக்க, பந்துவீசுவதற்கு முகமது ஷமி வந்தார். முதல் இரண்டு பந்துகளில் 4 ரன்களை விட்டுக் கொடுத்த அவர் பந்துவீச்சில் அடுத்த 4 பந்துகளும் விக்கெட்டுகளாக விழுந்தது. அதிலும் 3வது பந்தில் விராட் கோலி பாய்ந்து பிடித்த கேட்ச் மைதானத்தில் இருப்பவர்களையே வியக்க வைத்தது. முடிவில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
மேலும் படிக்க | கடந்த ஒரு வருடமாக காயம் அடையாத இந்திய வீரர் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ