அக்டோபர் 16, ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய டி20 உலகக் கோப்பையின் தற்போதைய பதிப்பில் கோவிட் பாசிட்டிவ் கிரிக்கெட் வீரர்களை பங்கேற்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அனுமதித்துள்ளது. ஐசிசி கிரிக்கெட் வாரியம் விதிகளை கணிசமாக தளர்த்தியுள்ளது மற்றும் டி20 உலகக்கோப்பையின் போது வீரர்கள் கட்டாய கோவிட் சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியதில்லை என்று கூறியது. மேலும், போட்டியில் ஒரு வீரர் கொரோனா வைரஸுக்கு சோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் வந்தால், அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளது ஐசிசி.
மேலும் படிக்க | பிசிசிஐ-ல் இருந்து வெளியேறிய பிறகு சவுரவ் கங்குலி எடுத்த முக்கிய முடிவு!
ஒரு வீரர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டால், அந்த வீரர் விளையாட்டில் பங்கேற்பது பொருத்தமானதா என்பதை குழு மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். ஒரு வீரர் கொரோனா வைரஸ் சோதனையில் பாதிக்கப்பட்டால் அணி நிர்வாகம் தங்கள் அணியில் மாற்றங்களைக் கொண்டு வரலாம். 2022 ஆம் ஆண்டு பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் போது இதே போன்ற விதிகள் கொண்டுவரப்பட்டது. ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் தஹ்லியா மெக்ராத், ஹர்மன்பிரீத் கவுரின் இந்தியாவுக்கு எதிராக கோவிட்-19 சோதனை செய்ததை அடுத்து விளையாட அனுமதிக்கப்பட்டார்.
டி20 உலக கோப்பையில் நடந்த தகுதி சுற்று போட்டியில் ஸ்ரீலங்கா அணியை நமீபியா வென்று சாதனை படைத்தது. ஆசிய கோப்பையில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா அணி 163 ரன்களை அடிக்க முடியாமல் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வி அடைந்தது. மற்றொரு போட்டியில் யுஏயி அணியை நெதர்லாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க | ரோகித்தின் ஹிட் லிஸ்டில் இளம் வேகப்பந்து வீச்சாளர்; இந்திய அணி வாய்ப்பு இனி கஷ்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ