தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் கார் விபத்தில் பலி; முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
மேகாலயா மாநிலத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் (18) உயிரிழந்தார்.
83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ள தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து நேற்று காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றுக்கொண்டு இருந்த போது எதிரே வந்த லாரி டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் டிரைவர் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன் மற்ற மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
மேலும் படிக்க | ஒற்றைக் கையில் டேபிள் டென்னிஸ் விளையாடும் வீரர் - வைரல் வீடியோ
அவரது மறைவுக்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் விஸ்வா மறைவுக்கு மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா இரங்கல் தெரிவித்துள்ளார். அதன்படி அவர் வெளியிட்ட ட்வீட் பதிவில், இளம் வயதில் கனவுகளை சுமந்துகொண்டிருந்த தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்தது மிகுந்த மனவேதனையை தருகிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தேவையான அனைத்து நடைமுறைகளையும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நம்பிக்கைக்குரிய, இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. சாதனை புரிந்து வந்த விஸ்வா விரைவில் நம்மை விட்டுப் பிரிந்தது வேதனை. கார் விபத்தில் உயிரிழந்த விஸ்வா தீனதயாளனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Tennis Retirement: எதிர்பாராமல் முன்கூட்டியே ஓய்வை அறிவித்த டென்னிஸ் நட்சத்திரங்கள்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!