இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.  இந்தியாவுக்காக பல சூப்பரான இன்னிங்ஸ்களை விளையாடியுள்ள அவர், எந்த விக்கெட்டிலும் ரன் குவிக்கும் அசாத்திய திறமை கொண்டவராக உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் என மூன்று வடிவிலான போட்டிகளிலும் தனக்கான இடத்தை ரிஷப் பன்ட் உறுதி செய்துள்ளதால், இவருக்கான வாய்ப்பு என்பது இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. தோனிக்கு பேக்கப் கீப்பராக கருத்தப்பட்ட அவர், இனிமேல் இந்திய அணி வாய்ப்பு கனவிலும் நினைக்க முடியாது.


மேலும் படிக்க | தோனி - கம்பீருக்கு இடையே என்ன பிரச்சனை? பல ஆண்டுகளுக்குப் பின் வெளியான ரகசியம்


விக்கெட் கீப்பர் & பேட்ஸ்மேன்


ரிஷப் பன்ட் வருகையால் இந்திய அணியின் வாய்ப்புஎன்பதை முற்றிலுமாக இழந்திருப்பவர் தினேஷ் கார்த்திக். தோனிக்கு பேக்கப் கீப்பராக இருந்து அவ்வப்போது அணியில் விளையாடி வந்த தினேஷ் கார்த்திக், கடந்த சில ஆண்டுகளாக எந்தப்போட்டிக்கும் அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. டெஸ்ட் போட்டியில் ரிஷப் பன்ட் நங்கூரமாக இடத்தை உறுதி செய்துவிட்ட நிலையில், ஒருநாள் போட்டியில் பேக்கப் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இஷான் கிஷன் வந்துவிட்டார். இதனால், அவருக்கான இந்திய அணி வாய்ப்பு என்பது இனிமேல் கிடைக்க துளியும் வாய்ப்புகள் இல்லை.



மோசமான ஃபார்ம்


20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர் பெரிய அளவில் சோபிக்கத் தவறினார். வங்கதேசம் அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் மட்டும் இந்திய அணியை கடைசி பந்தில் வெற்றி பெற வைத்த அவர், அதற்கடுத்தடுத்த வாய்ப்புகளில் சரியாக விளையாடவில்லை. இப்போதைய சூழலில் இந்திய அணிக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டிருப்பதால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான அறிவிப்பை தினேஷ் கார்த்திக் எந்நேரமும் வெளியிட வாய்ப்புகள் உள்ளன.


மேலும் படிக்க | இந்திய அணியின் ஸ்டார் ஓபனிங் பேட்ஸ்மேனை நிராகரிக்கும் ரோகித்சர்மா


தினேஷின் கிரிக்கெட் கேரியர்


தினேஷ் கார்த்திக் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடினார். 2004 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான அவர், தனக்கான இடத்தை நிரந்தரப் படுத்திக்கொள்ளவில்லை. 26 டெஸ்ட் போட்டிகளிலும், 94 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 32 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். ஐபிஎல் போட்டியில் கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்த அவர், இந்த ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR