மீண்டும் இந்திய அணியில் பும்ரா! பிசிசிஐ அதிரடி அறிவிப்புக்கு பின்னணியில் இருக்கும் கணக்கு
Jasprit Bumrah: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை மனதில் வைத்து இந்த அதிரடி முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.
பும்ரா காயம்
20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாக பும்ரா காயமடைந்தார். சிகிச்சையில் இருந்த அவர் இடையில் குணமானாலும், காயம் மீண்டும் தீவிரமடைந்தது. உடனடியாக அணியில் இருந்து வெளியேறி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதனால், 20 ஓவர் உலக கோப்பை மற்றும் நியூசிலாந்து, வங்கதேச தொடர்களில் அவர் விளையாடவில்லை. இப்போது உடல் நலம் அவர் தேறியிருந்தாலும் இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் சேர்க்கப்படவில்லை.
மீண்டும் இந்திய அணியில்
ஆனால், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரின் வருகை இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்படாத நிலையில், இப்போது அவசர அவசரமாக சேர்க்கப்பட்டிருப்பது ஏன்? என்ற கேள்வி பலருக்கு எழுந்துள்ளது.
மேலும் படிக்க | IND vs SL: இந்தியா இலங்கை டி20 போட்டியை இலவசமாக பார்க்க சில வழிகள்!
ஆஸ்திரேலியாவுக்கு ஸ்கெட்ச்
இலங்கை அணிக்கு எதிரான தொடர் முடிவடைந்ததும் பிப்ரவரியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இப்படியான சூழலில் பும்ரா போன்ற பந்துவீச்சாளர் அணிக்கு தேவை. அதேநேரத்தில் நேரடியாக டெஸ்ட் போட்டிக்கு களமிறக்கப்படுவதற்கு முன்பு ஒரு சில போட்டிகளில் பும்ரா விளையாட வேண்டும் என எண்ணிய பிசிசிஐ, அவசர அவசரமாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலேயே அவருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.
ரோகித் கேப்டன்
20 ஓவர் போட்டிக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி களமிறங்க இருக்கும் நிலையில், ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஜனவரி 10 ஆம் தேதி தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட முதல் போட்டி கவுகாத்தியிலும், அடுத்தடுத்த இரண்டு போட்டிகள் முறையே கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ