இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் கடும் பயிற்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 


இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடேயேயான இரண்டாவது போட்டி வரும் ஆக., 9-ஆம் நாள் துவங்குகிறது..



லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெறவுள்ள இப்போட்டியில் வெற்றிப் பெற இரண்டு அணிகள் பல்வேறு உக்திகளை கையாண்டு வருகின்றன. இங்கிலாந்து அணி தரப்பில் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன் படி டேவிட் மெல்லன்-க்கு பதிலாக ஓலி போப்-ம், பென் ஸ்டோக்-க்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் களமிறங்குவர் என அறிவித்துள்ளது. இந்திய அணியினை பொருத்துவரையில் தங்களது பந்துவீச்சாளர்களை மேலும் வலுப்பெறவைக்கும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்நிலையில் நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியினை கையகப்படுத்த இந்திய அணி வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்!