இந்தியா -இலங்கை மோதல்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணியை பொறுத்தவரை இதுவரை ஆடிய 6 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளை வென்று, நடப்பு உலக கோப்பை தொடரில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக கம்பீரமாக இருக்கிறது. இதனால் அரையிறுதி வாய்ப்பும் ஏறத்தாழ ஊறுதியாகிவிட்டது. இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் முதல் அணியாக அரையிறுதி வாய்ப்பையும் இந்தியஅணி உறுதி செய்துவிடும். பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான்கில்,விராட் கோலி, ராகுல் ஆகியோர் தூண்களாக உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, ஷமி, குல்தீப், ஜடேஜா ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். 


மேலும் படிக்க | உலகக் கோப்பை: அரையிறுதிக்கு செல்ல இந்த அணிகளுக்கு இன்னும் வாய்ப்புகள் இருக்கு..!


ரோகித் சர்மா உஷார்


இந்நிலையில் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா, இதுவரை தோல்வியை சந்திக்காமல் இந்திய அணி விளையாடினாலும் நாக் அவுட் போட்டியில் தோற்றால் அந்த ஒருபோட்டியுடன் என்னை கட்டம் கட்டிவிடுவார்கள் என கூறியுள்ளார். தான் ஒரு மோசமான கேப்டன் என முத்திரையும் குத்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார். உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பதே கனவு, அப்படி நடக்கவில்லை என்றால் அது தனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே  அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.


மோசமான கேப்டன் என்ற முத்திரை


ரோகித் சர்மா தொடர்ந்து பேசும்போது, " ஒரு மோசமான போட்டி அமைந்தால் திடீரென நான் மோசமான கேப்டனாக மாறி விடுவேன். இந்த தொடரில் உலகக்கோப்பைக்கு குறைவாக எது கிடைத்தாலும் அது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகும். தற்போது என்னுடைய பேட்டிங்கை நான் மகிழ்ச்சியுடன் செய்கிறேன். அதே சமயம் அணியின் சூழ்நிலையையும் மனதில் வைத்து விளையாடுகிறேன். களத்திற்கு சென்று காட்டுத்தனமாக பேட்டை சுழற்றி விளையாடாமல் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய மனநிலைமையாகும்.


ஒவ்வொரு முறையும் ஆட்டம் துவங்கும் போது ஸ்கோர் போர்ட் ஜீரோவாக இருக்கும். நான் களமிறங்கும் போது எவ்விதமான விக்கெட்டும் விழாமல் இருக்கும் என்பதால் துவக்க வீரராக களமிறங்குவது சாதகம் என்று சொல்வீர்கள். ஆனால் கடந்த ஆட்டத்தில் நான் அதிரடியாக விளையாடிய போது மறுமுனையில் பவர் பிளே முடிவதற்குள் 3 விக்கெட்டுகள் விழுந்ததால் நாங்கள் அழுத்தத்திற்கு உள்ளானோம். மேலும் உலகக்கோப்பையில் பல போட்டிகளை பார்த்துள்ளோம். அதில் சிறிய அணிகள் பெரிய அணிகளை வெல்லும் போது அதை அப்சட் என்று நான் சொல்ல மாட்டேன்" என தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | சூர்யகுமார் யாதவ் எடுத்த புதிய அவதாரம்... ஷாக் ஆன ஜடேஜா - வீடியோவை பாருங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ