20 ஓவர் உலக கோப்பையில் குரூப் 2 பிரிவில் யார் அரையிறுதிக்கு செல்வார்கள் என்பது மதில்மேல் பூனையாக இருக்கிறது. குரூப் 1-ல் நியூசிலாந்து அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், 2ஆம் இடத்துக்கு இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2 இடங்களை பிடிப்பதில் அடுத்தடுத்த போட்டிகளின் முடிவுகளை பொறுத்தே இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'இந்தியாவை வீழ்த்தினால் என்னையே தருகிறேன்' பாகிஸ்தான் நடிகையின் பகீர் அறிவிப்பு


ஜிம்பாப்வே அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவி, பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணி சூப்பர் 12 சுற்றோடு வெளியேறவும் வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இந்திய அணி ஜிம்பாப்வே அணியை வீழ்த்தினால் எந்த சிக்கலும் இல்லாமல் அரையிறுதிக்கு சென்றுவிடலாம். மறுபுறம் மழையால் போட்டி கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டு, புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து இந்திய அணி அரையிறுதிக்கு சென்றுவிடும்.



இப்போதைக்கு இந்திய அணி விளையாடும்போது மழை குறுக்கிடாமல் இருந்தால் போதும். மழை குறுக்கிட்டு போட்டியின் முடிவு இந்திய அணிக்கு பாதகமாக வந்தால் சிக்கலாக வாய்ப்பு இருக்கிறது. அதேபோல், நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வி அடைந்தாலோ அல்லது கைடவிடப்பட்டாலோ, பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தும்பட்சத்தில் தென்னாப்பிரிக்க அணி தொடரை விட்டு வெளியேறிவிடும். பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு சென்றுவிடும்.


மேலும் படிக்க | பிசிசிஐ என்னை தூக்கி எறிந்தாலும் நான் இதை செய்தேன் - முகமது ஷமி ஓபன் டாக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ