’இந்தியாவை வீழ்த்தினால் என்னையே தருகிறேன்’ பாகிஸ்தான் நடிகையின் பகீர் அறிவிப்பு

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவை ஜிம்பாப்வே அணி வீழ்த்தினால், ஜிம்பாப்வேயை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என பாகிஸ்தான் நடிகை அறிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 3, 2022, 04:52 PM IST
’இந்தியாவை வீழ்த்தினால் என்னையே தருகிறேன்’ பாகிஸ்தான் நடிகையின் பகீர் அறிவிப்பு title=

20 ஓவர் உலக கோப்பை சூப்பர் 12 சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா வரும் ஞாயிற்றுக்கிழமை கடைசி சூப்பர் 12 சுற்றுப் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியை தவிர மற்ற போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டாலும், கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று கம்பீரமாக அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது இந்திய அணி.

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள்!

அதேநேரத்தில் ஜிம்பாப்வே அணியை குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது. அந்த அணி இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை ஒரு ரன் வித்தியாத்தில் வீழ்த்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தங்கள் பக்கம் திருபிப் பார்க்க வைத்தது. இன்னும் சில போட்டிகளில் வெற்றிக்கு நெருக்கமாக சென்று தோல்வியை தழுவிய ஜிம்பாப்வே, இந்திய அணியை பெரும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள காத்திருகிறது. அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பில்லை என்றாலும், பாகிஸ்தானை வீழ்த்திய தெம்பில் இருக்கும் ஜிம்பாப்வே, இந்திய அணியையும் வீழ்த்த வேண்டும் என விரும்புகிறது.

அவர்களின் இந்த விருப்பத்துக்கு மேலும் ஒரு தெம்பை ஊட்டியிருக்கிறார் பாகிஸ்தான் நடிகை சேஹர் ஷின்வாரி. வரும் ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியுடன் மோதும் போட்டியில் ஜிம்பாப்வே அணி, இந்திய அணியை வீழ்த்தினால் ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த டிவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது. சிலர் கனவிலும் நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், திருமண ஆசையை விட்டுவிட வேண்டியது தான் என்றும் கமெண்ட் அடித்துள்ளனர். சிலர், அப்படியாவது இந்தியா தோல்வியடைந்து இந்த நடிகை ஜிம்பாப்வே நபரை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்வதாக கூறியுள்ளனர். 

மேலும் படிக்க | கோலியின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்த நபர்! கடுப்பில் விராட் செய்த காரியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News