IPL PLAYER: ஐ.பி.எல் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டிய வீரர் யார்?
இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி (MS Dhoni) இப்போது 150 கோடி ரூபாய் வருமானத்துடன், அதிக ஊதியம் பெறும் கிரிக்கெட் வீரராக முன்னணியில் இருக்கிறார்.
புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி (MS Dhoni) இப்போது 150 கோடி ரூபாய் வருமானத்துடன், அதிக ஊதியம் பெறும் கிரிக்கெட் வீரராக முன்னணியில் இருக்கிறார்.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், அவர் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம் பிடிக்கிறார்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021 சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுக்கு 15 கோடி ரூபாய் மதிப்புள்ள மற்றொரு ஐபிஎல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. தோனி பணம் நிறைந்த போட்டியின் வரலாற்றில் அதிக வருமானம் ஈட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
Also Read | IPL 2021: டெல்லி கேபிடல்சின் புதிய கேப்டன் யார்? ஊகங்களும், வியூகங்களும்
இப்போது ஐபிஎல் போட்டிகளில் அதிக வருமானம் ஈட்டிய வீரர்களான, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை 150 கோடி ரூபாய் சம்பாதித்த முன்னாள் இந்திய கேப்டன் முந்திவிட்டார்.
எம்.எஸ்.தோனி
இந்தியன் பிரீமியர் லீக்கிலிருந்து ரூ .150 கோடி சம்பாதித்த ஒரே வீரர் என்ற பெருமையை தோனி உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டில் ஐபிஎல் (IPL) தொடங்கியதிலிருந்து மகேந்திர சிங் தோனி தனது ஐபிஎல் ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக சம்பாதித்த அனைத்து பணமும் மொத்தத் தொகையில் அடங்கும்.
ரோஹித் சர்மா
ஐ.பி.எல்லில் இருந்து அதிக பணம் சம்பாதிக்கும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிரடி துவக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா, பணக்கார லீக்கில் மொத்தம் 146.6 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.
Also Read | டெல்லி கேபிடல்சின் புதிய கேப்டன் யார்? ஊகங்களும், வியூகங்களும்
விராட் கோலி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் விராட் கோஹ்லி (Virat Kohli) ஐ.பி.எல். 2008 ஆம் ஆண்டில், ஐபிஎல் தொடங்கியபோது கோஹ்லி அவ்வளவு சம்பளம் பெறவில்லை, இப்போது அதிக சம்பளம் வாங்கும் வீரராக இருந்தபோதிலும் அவர் மூன்றாவது இடத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். விராட் கோலியின் மொத்த வருவாய்143.2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.
(Times Now வழங்கிய கிரிக்கெட் வீரர்களின் சம்பள புள்ளிவிவரங்கள் தொடர்பான தகவல்களின் ஆதாரத்தில் எழுதப்பட்ட கட்டுரை)
Also Read | அதிமுக-பாஜக கூட்டணியில் சசிகலா? சூசகமாக சொல்கிறார் Thuglak குருமூர்த்தி
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR