IND vs ENG: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐந்தாவது டி 20 போட்டியில் இந்தியா அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை வென்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வெற்றியை அடுத்து சந்தோஷத்தில் இருந்த இந்திய அணிக்கு ஒரு கசப்பான செய்தியாக, இங்கிலாந்துக்கு எதிரான பந்து வீச்சில், மெதுவான ஓவர் வீதத்திற்காக டீம் இந்தியாவுக்கு (Team India) 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது திட்டமிடப்பட்ட நேரத்தை விட இரண்டு ஓவர்கள் குறைவாக பந்து வீசியதாக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.  ஐசிசி எலைட் பேனல் போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத் அணி இந்தியாவுக்கு அபராதம் விதித்தார்.


ICC விதிகளின் பிரிவு 2.22 ன் கீழ் இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ஐ.சி.சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும், அணியின் கேப்டன் விராட் கோஹ்லி (Virat Kohli) இந்த குற்றச்சாட்டையும் அபராதத்தை ஏற்றுக்கொண்டார்.  அதன் பிறகு இந்த வழக்கில் அதிகாரப்பூர்வ விசாரணை ஏதும் தேவையில்லை.


ஆன்-பீல்ட் நடுவர்கள் அனில் சவுத்ரி மற்றும் நிதின் மேனன் மற்றும் மூன்றாவது நடுவர் கே.என்.அனந்தபாதமபன் ஆகியோர் டீம் இந்தியா மீது இந்த  குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்தியா ஐந்தாவது டி 20 போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | IND vs ENG: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய விராட் சேனா


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR