IND vs ENG: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய விராட் சேனா

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐந்தாவது டி 20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியை தொடர்ந்து, அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களும் தங்கள் மகத்தான திறனை வெளிப்படுத்தினர். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை வென்றது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 21, 2021, 06:38 AM IST
  • கடைசி மற்றும் 5வது போட்டியில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை வென்றது.
  • விராட் கோலியும் மற்றும் ரோஹித் ஷர்மாவும் இணைத்து முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்தனர்.
  • 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
IND vs ENG: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய விராட் சேனா title=

India vs England Highlights: கடைசி மற்றும் 5வது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி ஒரு அற்புதமான செயல்திறனை வெளிப்படுத்தியது, 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த ஐந்தாவது டி 20 போட்டியில் முதலில் ஆடிய இந்திய பேட்ஸ்மேன்கள் அதிரடியை தொடர்ந்து, அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களும் தங்கள் மகத்தான திறனை வெளிப்படுத்தினர். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரை வென்றது.

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் இறுதி டி 20 ஐ இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மற்றும் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது. பொதுவாக மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்ய வரும் விராட் கோலி (Virat Kohli), தனது பேட்டிங் நிலையை மாற்றியமைத்து, தொடக்க வீரராக களம் இறங்கினார். விராட் கோலியும் மற்றும் ரோஹித் ஷர்மாவும் இணைத்து முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் சேர்த்ததால், அணிக்கு நல்ல அடித்தளமாக அமைந்தது. இதனால் மற்ற வீரர்கள் ஆடும் போது அதிரடியாக ரன்களை சேர்க்க சரியான தளத்தை அமைத்தது.

ALSO READ |  ICC Rating: Narendra Modi Stadium ஆடுகளம் சராசரியா? மிகவும் ஏற்றதா?

இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் எயோன் மோர்கன் (Eoin Morgan), இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். ரோஹித் (Rohit Sharma) தனது அரைசதத்தை நிறைவு செய்தார், இருப்பினும், இங்கிலாந்து பந்து வீச்சாளர் பெல் ஸ்டோக்ஸ் பந்தில் ரோஹித் 64 (34) ரன்களில் ஆட்டம் இழந்தார்.  அவர் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) பத்தாவது ஓவரில் தனது கேப்டனுடன் ஜோடி சேர்ந்தார். சூர்யகுமார் (17 ரன்களில் 32) ஆட்டமிழந்த நேரத்தில், இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா (Hardik Pandya) மற்றும் விராட் கோலி சேர்ந்து, இந்த ஜோடி 81 ரன்களை விளாசியது. கோஹ்லி டி 20 போட்டியில் தனது 20 வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதே நேரத்தில் பாண்டியா 17 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக டி 20 போட்டிகளில் (20 ஓவர்களில் 224/2) அதிகபட்ச ரன்களை குவித்தது.

 

அதற்கு பதிலளிக்கும் வகையில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் ஓவரில் முக்கிய பேட்ஸ்மேன் ஜேசன் ராயை இழந்து பயங்கரமான அதிர்ச்சியை இங்கிலாந்து ரசிகர்களுக்கு கொடுத்தது. ஆனால் ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் மாலன் இணைந்து 13 வது ஓவர் வரை இந்திய பந்து வீச்சாளர்களை கடுமையாகத் தாக்கினார்கள்.

ALSO READ |  ஜமைக்காவிற்கு கொரொனா தடுப்பூசி; பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் Chris Gayle

இந்த இருவரும் அவுட் ஆனதை அடுத்து, அதைத் தொடர்ந்து இங்கிலாந்து பெரும் பேட்டிங் சரிவை சந்தித்தது. மேலும் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News