நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் ஆடுகளம் தொடர்பாக ஐ.சி.சி தற்போது தனது தரக் கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பகல்-இரவு டெஸ்டுக்கு ‘சராசரி’என்றும், சர்வதேச டி 20 போட்டிகளுக்கு ‘மிகவும் ஏற்றது’என்றும் தெரிவித்துள்ளது.
அதோடு, இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்டுக்கான எஸ்சிஜி (SCG) ஆடுகளமும் 'சராசரி' என மதிப்பிடப்பட்டது.
அகமதாபாத்தில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பகல்-இரவு டெஸ்டுக்கான சர்ச்சைக்குரிய ஆடுகளத்திற்கு உலக கிரிக்கெட் அமைப்பான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சராசரி மதிப்பீட்டை வழங்கியுள்ளது. ஐ.சி.சி தனது ‘விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்’ பக்கத்தில் சமீபத்திய அனைத்து விளையாட்டுகளின் மதிப்பீடுகளையும் புதுப்பித்துள்ளது. மோட்டேராவில் உள்ள ஆடுகளம் மூன்றாவது ‘டெஸ்ட்’ க்கு ‘சராசரி’ என்றும் இறுதி டெஸ்டுக்கு ‘சரியானது’ என்றும் மதிப்பிடப்பட்டது.
Also Read | IPL 2022: புதிய 2 IPL அணிகளுக்கான ஏலம் மே மாதம் நடைபெறும்
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெற்ற முதல் டி 20 சர்வதேச போட்டிக்கு இது “மிகவும் உகந்தது” என மதிப்பிடப்பட்டது.
தற்செயலாக, இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்டுக்கான எஸ்சிஜியில் ஆடுகளமும் ‘சராசரி’ என மதிப்பிடப்பட்டது. பிங்க்-பந்து ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தரமற்ற ஆடுகளம் புதுப்பிக்கப்பட்ட நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்கு தடைகள் விதிக்கப்படலாம் என்ற அச்சங்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | வழுக்கை தலை அவதாரத்தில் MS Dhoni; வைரல் ஆகும் ஐபிஎல் 2021 விளம்பரம்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வென்ற நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் போது இந்த ஆடுகளம் கடுமையான விவாதத்திற்கு உட்பட்டது.
இந்த தொடரின் இரண்டாவது போட்டி சென்னையில் நடைபெற்றது. அதில் இந்திய வெற்றி பெற்றதால்தான், தொடர் சமனானது. அந்த போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானத்திற்கும் சராசரி மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இங்கிலாந்து வென்ற முதல் டெஸ்ட் ஆடுகளத்திற்கு முதல் தர சான்றைசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வழங்கியது.
Also Read | Taj Mahal பெயர் ராம் மஹால் என்று மாற்றப்படுமா? காரணம்!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR