India vs Argentina: டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஒலிம்பிக்கின் இறுதிப் போட்டிக்கு செல்ல இந்திய அணிக்கு ஒரு சிறந்த வாய்ப்பு என எதிர்பார்த்த நிலையில், கடைசி வரை போராடிய பெண்கள் ஹாக்கி அணியினர் அரையிறுதியில்  1-2 என்ற கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோற்றது. அடுத்து பிரிட்டன் அணியுடன் வெண்கலக் கோப்பைகான போட்டியில் மோதவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேப்டன் ராணி ராம்பால் தலைமையிலான மகளிர் அணி (Indian Womens Hockey Team) உலக அளவில் நம்பர் 1 நெதர்லாந்துக்கு எதிராக 1-5, ஜெர்மனிக்கு எதிராக 0-2 மற்றும் கிரேட் பிரிட்டனுக்கு எதிராக 1-4 என தோல்வியடைந்தது. இருப்பினும், அவர்கள் அயர்லாந்துக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர், பின்னர் 4-3 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறும் நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டனர். பின்னர் கிரேட் பிரிட்டன், அயர்லாந்தை தோற்கடித்து இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.


அதன் பிறகு காலிறுதியில் உலக தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, உலக நம்பர் -2 அணியான ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வரலாறு சாதனை படைத்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 


ALSO READ | Tokyo Olympics 2020: அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி, வெண்கலம் கைகூடுமா?


முதல் கால் பகுதியில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது:
இன்றைய அரையிறுதி போட்டியில் இந்திய அணி சிறப்பாக தொடங்கியது மற்றும் ஆரம்ப நிமிடங்களில் இந்தியாவின் குர்ஜித் சிங் கோல் அடித்தார். கோலுக்குப் பிறகு அர்ஜென்டினா நிறைய தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் இந்திய அணி அவர்களின் தாக்குதலை சிறப்பாக தடுத்து கோல் அடிக்கும் முயற்ச்சியை தடுத்தனர். அர்ஜென்டினாவுக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. முதல் கால் பகுதியின் முடிவில், இந்திய அணி 1 கோலும், அர்ஜென்டினா கோல் எதுவும் போடாமல் இருந்தது. 


இரண்டாவது கால் பகுதியில் 1-1 என சமநிலை:
இரண்டாவது கால் பகுதியில் தொடக்கத்தில் இருந்து அர்ஜென்டினா அணி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது மற்றும் ஒரு வாய்ப்பை இழந்த பிறகு, அவர்கள் முதல் கோலை அடித்தனர். இப்போது ஸ்கோர் 1-1 என சமநிலையானது. இந்த கால் பகுதியில் அர்ஜென்டினா இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவில்லை என்றாலும், இந்திய அணி தொடர்ந்து கோல்களை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு பெனால்டி கார்னர்களை இழந்தது.


ALSO READ | வறுமையிலிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்கான பயணத்தில் ராணி ராம்பால்


மூன்றாவது கால் பகுதியில் அர்ஜென்டினா 2-1 என முன்னிலை பெற்றது:
மூன்றாவது கால் பகுதியில், அர்ஜென்டினா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பெனால்டி கார்னரைப் பயன்படுத்தி ஒரு கோல் அடித்தது. இந்திய அணியினரின் தொடர்ந்து கோல் அடிப்பதற்கான வாய்ப்பை அர்ஜென்டினா சிறப்பாக தடுத்தது. இறுதியில் 2-1 என அர்ஜென்டினா முன்னிலை பெற்றது. 


நான்காவது கால் பகுதியில் கோள் அடிக்கவில்லை:
நான்காவது கால் பகுதியில் அர்ஜென்டினா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணி பெனால்டி கார்னரை இழந்துள்ளது. ஆட்டத்திற்கான நேரம் முடிவடைந்ததால், இறுதியாக அர்ஜெண்டினா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்து 3வது இடத்திற்கான போட்டியில் மகளிர் ஹாக்கி அணி விளையாட உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR