உலகக்கோப்பை போட்டிக்கு இந்த அணிகள் நேரடி தேர்வு!
2024 ஆண்கள் டி20 உலகக் கோப்பைக்கு 12 அணிகள் தேர்வாகி உள்ளன.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தும் 2024-ம் ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பைக்கு 12 அணிகள் தகுதி சுற்று இன்றி தகுதி பெற உள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில், 2024 பெண்கள் T20 உலகக் கோப்பை மற்றும் 2025 மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை ஆகியவற்றிற்கான தகுதிச் செயல்முறையை ஐசிசி இறுதி செய்துள்ளது.
மேலும் படிக்க | சென்னை அணி பிளேஆஃப்பிற்கு தகுதி பெற செய்ய வேண்டிய விசயங்கள்!
2024-ம் ஆண்டு நடைபெறும் ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பையில் முதன்முறையாக 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த போட்டியில் பங்கேற்க தகுதிச் செயல்முறை என்னவென்றால், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் இடம்பிடிக்கும் முதல் எட்டு அணிகள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா அணிகள் தகுதி பெரும். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு, இந்த ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி வரை ஐசிசி டி20 தரவரிசையில் இருக்கும் அணிகள் இடம்பெறும்.
இந்த ஆண்டு உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் எட்டு இடங்களுக்குள் இடம் பெற்றால், ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் முதல் மூன்று அணிகள் தரவரிசையைப் பெறும். இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் எட்டு இடங்களுக்குள் வரத் தவறினால், தரவரிசைப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2024 பதிப்பிற்கு தகுதி பெறும். மீதமுள்ள எட்டு இடங்கள் ஐசிசியின் மற்ற தகுதிச் சுற்றுகள் மூலம் நிரப்பப்படும், இதில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவின் முதல் இரண்டு அணிகளும், அமெரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா பசிபிக் குழுக்களின் தலா ஒரு அணியும் அடங்கும்.
2024 மகளிர் T20 உலககோப்பைக்கு நேரடி நுழைவு பெரும் எட்டு அணிகள்:
2024 ஆம் ஆண்டு பெண்கள் டி20 உலகக் கோப்பைக்கு இதேபோன்ற தகுதிச் செயல்முறை பின்பற்றப்பட உள்ளது. இதில் பத்து அணிகள் விளையாட உள்ளன, எட்டு அணிகள் தானாக தகுதி பெரும். தென்னாப்பிரிக்காவில் திட்டமிடப்பட்ட 2023 பதிப்பில் இரண்டு குழுக்களில் இருந்து முதல் மூன்று அணிகள், போட்டி நடத்துபவர் மற்றும் ஐசிசி மகளிர் T20 தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அணிகள் இடம்பெறும். முதல்-ஆறு அணிகளில் ஹோஸ்ட்கள் இருந்தால், அட்டவணையில் அதிக தரவரிசையில் உள்ள அணிகள் தானாகவே தகுதி பெறும். மீதமுள்ள இரண்டு அணிகள் தகுதிச் சுற்றில் இருந்து வெளிவரும். இதற்கிடையில், முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக் கோப்பை 2023 ஜனவரியில் தென்னாப்பிரிக்காவில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது, இதில் 16 அணிகள் பங்கேற்கின்றன. மகளிர் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் இந்த போட்டிகள் பிப்ரவரி 9 முதல் 26 வரை நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | சென்னை அணியின் தோல்விக்கான 4 காரணங்கள் இவை தான்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR