ஐபிஎல் 2022 மிகப்பிரம்மாண்டமாக மார்ச் 26 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. இந்த ஆண்டு முதல் புதிதாக 2 அணிகள் களம் காண்கின்றன. மொத்தம் 10 அணிகள் களம் காணும் இந்த தொடரில் சரவெடிகளுக்கு பஞ்சமிருக்காது. கடந்த சீசன்களை பலம் வாய்ந்த அணியாக மும்பை இருந்தாலும், இந்த ஐபிஎல் தொடரில் அந்த அணியைவிட அதிரடி ஓபனிங் பேட்ஸ்மேன்களை கொண்ட 3 அணிகள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. டெல்லி கேப்பிட்டல்ஸ்


டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு நீண்ட வருடங்களுக்குப் பிறகு அதிரடி மன்னன் டேவிட் வார்னர் திரும்பியுள்ளார். அவருக்கு பக்கபலமாக அந்த அணியில் ஏற்கனவே இளம் வீரர் பிரித்திவி ஷா இருக்கிறார். பந்துகளை அநாயசமாக விளாசுவதில் வல்லவரான பிரித்திவியுடன் அனுபவம் வாய்ந்த வார்னர் தொடக்க ஆட்டக்காரராக இருப்பது டெல்லி அணிக்கு கூடுதல் பலம். இப்போதைய நிலையில், வலுவான ஓபனிங் பேட்ஸ்மேன்களை கொண்ட அணியாக டெல்லி உள்ளது. 


மேலும் படிக்க | ஜெர்ஸியை அறிமுகப்படுத்தியது DC: என்ன ஸ்பெஷல்?


2. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்


தரமான ஓபனிங் பேட்ஸ்மேன்களைக் கொண்ட மற்றொரு அணி புதிதாக ஐபிஎல் தொடரில் களமிறங்கியிருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். இதுவரை மும்பை அணிக்காக விளையாடிய குயின்டன் டிகாக் இம்முறை லக்னோ அணிக்காக விளையாட இருக்கிறார். அவருக்கு பக்கபலமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் களம் காண உள்ளார். இவர்கள் நிலைத்து நின்றுவிட்டால், எதிரணிக்கு மிகப்பெரிய தலைவலி தான். 



3. சென்னை சூப்பர் கிங்ஸ்


வழக்கம்போல் மும்பைக்கு போட்டியாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இம்முறையும் வலுவான ஓப்பனிங் பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளது. கடந்த சில சீசன்களில் சென்னை அணிக்கு தூணாக இருந்த டூபிளசிஸ் இம்முறை பெங்களூரு அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது இடத்துக்கு டேவிட் கான்வேய் சென்னை அணிக்குள் வந்துள்ளார். அவரும், ருதுராஜ் கெய்வாட்டும் சூப்பர் கிங்ஸின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களம் காண இருக்கின்றனர். இருவரும் அதிரடி ஆட்டக்காரர்கள் என்பதால், மற்ற அணிகளுக்கு சரவெடி காத்திருக்கிறது. 


மேலும் படிக்க | "ஐபிஎல் திருவிழா 2022" - புதிய மாற்றமும் புதிய வியூகமும்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR