இந்த ஐபிஎல் போட்டியில் முதன்முறையாக களமிறங்கிய அணி குஜராத் டைட்டன்ஸ். ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இந்த அணி மீது தொடக்கத்தில் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என யூகிக்கப்பட்ட பட்டியலில் கூட குஜராத் டைட்டன்ஸ் அணியை யாரும் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால், தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் 9 வெற்றிகளுடன் முதல் அணியாக ஐபிஎல் போட்டியின் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இதற்கு அந்த அணியில் இருக்கும் நட்சத்திர வீரர்களே காரணம். பேட்டிங், பந்துவீச்சு என அனைத்து துறைகளிலும் சிறப்பாக ஜொலித்தனர். பேட்டிங்கை பொறுத்த வரை தொடக்க வீரர் சுப்மான் கில் இந்த சீரிஸ் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 384 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒருபோட்டியில் 94 ரன்கள் விளாசியிருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருக்கிறார்.


மேலும் படிக்க | ரோகித் அவுட் சர்ச்சை: மூன்றாவது நடுவரை விளாசும் மும்பை ரசிகர்கள்


கேப்டனாக இருக்கும் அவர் பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு ஒரு வீரராகவும் பெரிய கம்பேக் கொடுத்துள்ளார். காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடாமல் இருந்த அவர், நேரடியாக ஐபிஎல் போட்டியில் களமிறங்கினார். இதுவரை நடப்பு ஐபிஎல் தொடரில் 344 ரன்கள் எடுத்துள்ளார். குஜராத் அணியின் பினிஷர் ரோலில் டேவிட் மில்லர் மற்றும் திவாட்டியா என இரண்டு பேர் உள்ளனர்.  அதில், ஃபார்மில் இருக்கும் மில்லர் இதுவரை 332 ரன்கள் எடுத்து பேட்டிங்கில் 3வது இடத்தில் இருக்கிறார்.



பேட்டிங்கில் ஒருபுறம் ஜொலிக்கும் குஜராத் அணி, பந்துவீச்சிலும் டாப் கிளாசில் உள்ளது. முகமது சமி இதுவரை 16 விக்கெட்டுகளை எடுத்து குஜராத் அணியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் வரிசையில் முன்னணியில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ரஷித் கான் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பதுடன், அனைத்து போட்டிகளிலும் மிகவும் சிக்கனமாக பந்துவீசியவர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக, லாக்கி பெர்குசன் இருக்கிறார். 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் அவர், போட்டிக்குப் போட்டி அதிவேகமாக பந்து வீசி வருகிறார். 


மேலும் படிக்க | இனி ஓய்வெடுக்கப்போகும் சூர்யகுமார் யாதவ் - மும்பைக்கு பெரும் பின்னடைவு


இதனடிப்படையில் பார்க்கும்போது, பேட்டிங்கில் 3 பேரும், பந்துவீச்சில் 3 பேரும் என அந்த அணியில் ஒருமித்து செயல்பட்டு ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியை அழைத்துச் சென்றுள்ளனர். இதற்காக கேப்டன் பாண்டியாவுக்கும், அணியினருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR