இனி ஓய்வெடுக்கப்போகும் சூர்யகுமார் யாதவ் - மும்பைக்கு பெரும் பின்னடைவு

சூர்யகுமார் யாதவ் காயம் காரணமாக 4 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : May 11, 2022, 08:59 AM IST
  • மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் காயம்
  • 4 வாரங்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தல்
  • தென்னாபிரிக்க தொடரில் பங்கேற்பது சந்தேகம்
இனி ஓய்வெடுக்கப்போகும் சூர்யகுமார் யாதவ் - மும்பைக்கு பெரும் பின்னடைவு title=

மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவரது காயம் குணமடைய சுமார் 4 வாரங்கள் வரை ஆகும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஜூன் 9 ஆம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்தியா  போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. 

சூர்யகுமார் யாதவ் காயம் 

மே 6ஆம் தேதி நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது சூர்யகுமார் யாதவ் ரன் எடுக்கும்போது இடது கையில் காயம் ஏற்பட்டது. அந்த போட்டின் போதே அவருடைய கையில் வீக்கம் இருந்தது. இதனால், மும்பை அணியின் அடுத்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் களமிறங்கவில்லை. மேலும், ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மும்பை அணி வெளியிட்ட அறிவிப்பில், சூர்யகுமார் யாதவுக்கு இடது கையில் ஏற்பட்ட காயம் காணமாக அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். பிசிசிஐ மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தது. 

பிசிசிஐ வட்டாரங்கள்

சூர்யகுமார் யாதவ் காயம் குறித்து பிசிசிஐ-க்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கும்போது, குறைந்தபட்சம் 4 வாரங்கள் வரை அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அவரின் காயத்தின் தன்மை வீரியம் மிக்கதாக இருப்பதால், மருத்துவர்கள் குறைந்தபட்சம் ஒருமாதமாவது ஓய்வெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இது சூர்யகுமார் யாதவ்க்கும் பின்னடைவாக அமைந்துள்ளது.  

மேலும் படிக்க | பதற்றத்தில் பேட்டை கடித்து சாப்பிடும் தோனியின் புகைப்படம் வைரல்

பெங்களுருக்கு விரைகிறார்

காயம் ஏற்பட்டுள்ள சூர்யகுமார் யாதவ், பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்க வைக்கப்படுவார் என கூறப்படுகிறது. மருத்துவர்களின் விரிவான அறிக்கை கிடைத்த பிறகு அங்கு செல்ல உள்ளார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அவர், அங்கு உடற்தகுதி பெற்றவுடன் பயிற்சிக்கு திரும்புவார். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி விரைவில் வர உள்ளதால், காயத்தில் குணமடைந்து தேசிய கிரிக்கெட்டுக்கு திரும்ப வேண்டும் என்பது சூர்யகுமார் யாதவின் இலக்காக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர், இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 309 ரன்கள் எடுத்திருந்தார்.

மேலும் படிக்க | ரோகித் அவுட் சர்ச்சை: மூன்றாவது நடுவரை விளாசும் மும்பை ரசிகர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News