இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது. 2வது டெஸ்ட் போட்டி பெங்களூரில் வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பகலிரவு போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்றாலும், ரோகித் சர்மா மற்றும் விராட் பங்களிப்பு இல்லாமலேயே இந்திய அணியை இந்த 3 பேர் வெற்றிக்கு அழைத்துச் செல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள் அவர்களின் பங்களிப்பு என்பது, ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் முதுகெலும்பாக இருக்கும் என கூறப்படும் அந்த 3 பேர் யார்?


மேலும் படிக்க | வார்னே ஒன்றும் சிறந்த பவுலர் இல்லை: இந்திய முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து!


ஹனுமா விஹாரி   


நல்ல ஃபார்மில் இருக்கும் ஹனுமா விஹாரி, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனது பேட்டிங்கால் அனைவரது கனவத்தையும் ஈர்த்து வருகிறார். ஆஸ்திரேலியாவல் இந்திய அணிக்காக சிறப்பாக பல போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 58 ரன்கள் எடுத்தார். 2வது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


ரவீந்திர ஜடேஜா 


ரோகித் கேப்டன்ஷிப்புக்கு முன்பு அதிகம் பந்துவீச்சில் மட்டுமே கவனம் செலுத்தி ரவீந்திர ஜடேஜா, இப்போது பேட்டிங்கிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக இருக்கும் ரவீந்திர ஜடேஜா, முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி 175 ரன்கள் குவித்ததுடன் இரண்டு இன்னிங்ஸூகளிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவருடைய ஆட்டம் அடுத்த போட்டியிலும் இவ்வாறே இருக்கும் என அடித்து சொல்கின்றனர் ரசிகர்கள்.


மேலும் படிக்க | பாகிஸ்தான் வீரரின் மகளை கொஞ்சும் இந்திய வீரர்கள்! வைரலாகும் வீடியோ!


ஸ்ரேயாஸ் அய்யர்


எதிர்காலத்தில் விராட்கோலியின் இடத்தை நிரப்ப போகும் ஒரு வீரராக பார்க்கப்படுபவர் ஸ்ரேயாஸ் அய்யர். உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவருக்கு, இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர இடம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால், கடந்த டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸூகளிலும் சிறப்பாக விளையாடியதால், அவருக்கான இடம் என்பது இனி இந்திய அணியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 12 ஆம் தேதி தொடங்கும் 2வது டெஸ்டின் பகலிரவு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த 3 வீரர்களும் ரோகித் மற்றும் விராட் பங்களிப்பு இல்லாமலேயே இந்திய அணியை டெஸ்ட் போட்டியில் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடியவர்களாக பார்க்கப்படுகின்றனர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR