விரைவில் தமிழகத்தில் சர்வதேச ஆடவர் டென்னிஸ் - அமைச்சர் உறுதி
தமிழ்நாட்டில் நடந்துவந்த சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டிகளை மீண்டும் நடத்த தமிழக அரசும் டென்னிஸ் சங்கம் விரைந்து முயற்ச்சி எடுக்குமென அமைச்சர் மெய்யநாதன் உறுதியளித்துள்ளார்.
சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி தொடர் முதல்முறையாக நடைபெற உள்ளது. சென்னையில் அடுத்த மாதம் 12ஆம் தேதி முதல் தொடங்கி 18ஆம் தேதிவரை இந்தத் தொடரானது நடைபெறும். இதனையொட்டி இன்று சென்னை எம்.ஆர்.சி நகரில் இருக்கும் லீலா பேலஸில் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியை சென்னை நுங்கம்பாக்கத்தில் நடத்த 5 கோடி ரூபாய் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதில் டென்னிஸ் மைதானம் சீரமைப்பு மற்றும் உலக தரத்தில் புதுப்பிக்கபட்ட அதி நவீன ஒளி விளக்குகள் அமைக்கபட இருக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரம்பரியமாக பல ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்றுவந்த சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டிகள் நம் கைவிட்டு சென்றுவிட்டது. மீண்டும் தமிழகத்தில் சர்வதேச ஆடவர் டென்னிஸ் போட்டிகளை நடத்த தமிழ்நாடு அரசும் தமிழக டென்னிஸ் சங்கமும் விரைந்து முயற்சி செய்யும்.இங்கு வரக்கூடிய விளையாட்டு வீரர்களுக்கு யோகா உள்ளிட்ட தமிழர்களின் கலாசாரத்தை எடுத்துரைக்கவும் திட்டம் உள்ளது” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய தமிழக டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்ந்தராஜ், “ ஆர்வமுள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக டென்னிஸ் பயிற்சி தமிழக டென்னிஸ் சங்கத்தால் அளிக்கப்படும்” என்றார்.
மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான் போர் எப்போது ஆரம்பித்தது தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ