ஆசிய கோப்பை 2023 செப்டம்பர் மாதம் பாகிஸ்தானால் நடத்தப்பட உள்ளது. ஆனால் ஆசிய கோப்பையை நடத்துவது குறித்து இதுவரை எதுவும் கூறப்படவில்லை. இந்திய அணி பாகிஸ்தான் செல்ல தயக்கம் காட்டிக் கொண்டிருப்பதால், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்திய அணி அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தானுக்கு வெளியேவும், மற்ற அணிகள் பாகிஸ்தானில் விளையாடும் வகையிலும் அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இதற்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சாய் சுதர்சன் தனக்கான இடத்தை உறுதி செய்யும் வகையில் டிஎன்பிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க - ICC ODI World Cup 2023: இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பற்றி வெளியானது முக்கிய தகவல்!


சாய் சுதர்சன் அதிரடி ஆட்டம்



தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023ல் கோவை கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாய் சுதர்சன், திங்கள்கிழமை (ஜூன் 12) நடந்த போட்டியில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் சிக்ஸர்களை பறக்க விட்டார். அவர் 45 பந்துகளில் 191.11 என்ற அபார ஸ்டிரைக் ரேட்டில் 86 ரன்கள் எடுத்தார். முதல் 12 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 58 ரன்கள் எடுத்தார். இவரது ஆட்டத்தால் கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


கோவை கிங்ஸ் இமாலய வெற்றி


சாய் சுதர்ஷனின் இன்னிங்ஸால், தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023-ன் முதல் போட்டியில் கோவை கிங்ஸ் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாய் சுதர்ஷன் ஐபிஎல் 2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடினார். அப்போது, பல பெரிய இன்னிங்ஸ்களை விளையாடியதால் அவரது பெயர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது.


ஐபிஎல் இறுதிப் போட்டியில் மறக்க முடியாத இன்னிங்ஸ்


சாய் சுதர்ஷன் ஐபில் இறுதிப் போட்டியிலும் அதிரடியாக ஆடியிருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற அந்த போடியில், குஜராத் அணி தோல்வியடைந்தாலும், முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடிய சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்களை விளாசினார். 204 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அந்த ரன்களை எடுத்தார். அவரது பேட்டில் இருந்து 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளும் வந்திருந்தது. இந்த ஐபிஎல் சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 362 ரன்கள் குவித்துள்ளார். தொடர்ச்சியாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சாய் சுதர்சன், பிசிசிஐ தேர்வாளர்கள் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். ஆசியக்கோப்பையில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், விரைவில் இவருக்கான வாய்ப்பு இந்திய அணியில் காத்திருக்கிறது என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.


மேலும் படிக்க | Gautam Gambhir On MS Dhoni: தோனியை தாக்கிய கம்பீர்.. வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ