Gautam Gambhir On MS Dhoni: தோனியை தாக்கிய கம்பீர்.. வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள்

Gautam Gambhir On MS Dhoni: தோனி மற்றும் விராட் கோலி உடனான உறவு, ஐபிஎல் 2023 இல் நடந்த மோதல், உள்ளிட்ட பல விஷயங்கள் தொடர்பாக கௌதம் கம்பீர் தனது மௌனத்தை கலைத்துள்ளார். அவரது இந்த பேட்டி வைரல் ஆனதை அடுத்து ட்விட்டரே களேபரமாகியுள்ளது.

Written by - Ezhilarasi Palanikumar | Edited by - Shiva Murugesan | Last Updated : Jun 12, 2023, 05:08 PM IST
  • இந்தியா என்பது ஒரு அணி, ஆனால் இதை சிலர் மறந்து தனி நபர் மீது வெறி கொண்டு இருக்கிறார்கள்.
  • விராட் கோலி பக்கம் நியாயம் இல்லை. அதனால்தான் அந்த மோதல் நடந்தது.
  • ஒரு அணியை வழிநடத்துவதற்கு கேப்டனின் பங்கு மிகப் பெரியது.
Gautam Gambhir On MS Dhoni: தோனியை தாக்கிய கம்பீர்.. வறுத்தெடுக்கும் தோனி ரசிகர்கள் title=

Gautam Gambhir Vs MS Dhoni: சமீபத்தில் இந்திய முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தனது கிரிக்கெட் வாழ்க்கை உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அவர் பேசிய அந்த கருத்துக்கள் இப்போது இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் ஹீரோ வழிபாடு அதிகமாக உள்ளது. குறிப்பாக ஒரு சில வீரர்கள் மட்டுமே நட்சத்திரங்களாக இருக்கிறார்கள். அவர்கள் மீது ஒட்டுமொத்த மீடியாவின் பார்வையும் இருக்கிறது என்று சொல்லியதோடு இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியை குறிவைத்து கம்பீர் இவ்வாறு பேசி உள்ளார்.

உலக கோப்பை ஹீரோ யுவராஜ் சிங் தான் -கௌதம் கம்பீர்
மேலும் ஒரு தனிநபரும் அவரது PR குழுவும் அவரை 2007 மற்றும் 2011 உலக கோப்பையின் போது ஹீரோவாக்கினார்கள். ஆனால் உண்மையில் 2 போட்டிகளிலும் இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றது யுவராஜ் சிங் தான். யுவராஜ் எப்போதாவது, "நான் தான் உலகக்கோப்பை வெல்ல காரணமானவர்" என்று கூறினாரா என்றும் கம்பீர் பேசி உள்ளார். இந்தியா என்பது ஒரு அணி ஆனால் இதை சிலர் மறந்து தனி நபர் மீது வெறி கொண்டு இருக்கிறார்கள். இதுதான் ஐசிசி கோப்பையை நீண்ட காலமாக இந்திய அணி வெல்லாமல் போனதற்கு காரணம் என்றும் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

விராட் கோலியுடன் மோதல் குறித்து பேசிய கம்பீர்:
அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு ஐபில் தொடரில் விராட் கோலியும் கம்பீரும் மோதிக்கொண்டது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியின் போது நவீன் உள் ஹக் பக்கம் நியாயம் இருந்தது. ஆனால்  விராட் கோலி பக்கம் நியாயம் இல்லை. அதனால்தான் அந்த மோதல் நடந்தது. நான் நவீன் உள் ஹக்குக்காக சப்போர்ட் செய்தேன். மற்றபடி தோனி மற்றும் விராட் கோலியுடன் எனது உறவு என்பது ஒன்றுதான். எங்களுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டாலும் அது களத்தில் மட்டுமே இருக்கும் வெளியில் அல்ல. மேலும் எங்களுக்கிடையில் தனிப்பட்ட பகை என்ற ஒன்று இல்லை என்றார்.

மேலும் படிக்க - ICC ODI World Cup 2023: இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பற்றி வெளியானது முக்கிய தகவல்!

தோனி புகழ் பாடதீர்கள் -சீரிய ஹர்பஜன் சிங்:
இந்நிலையில் மற்றொரு இந்திய வீரரான ஹர்பஜன் சிங்கும் தோனி ரசிகர் ஒருவருக்கு தோனியை சீண்டும் வகையில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு ரிப்ளையை கொடுத்துள்ளார். முதலில் அந்த ட்விட்டர் வாசி எந்தவித பயிற்சியாளரும் இல்லாமல், கேப்டன் அனுபவமும் இல்லாமல், மூத்த வீரர்களின் ஆதரவும் இல்லாமல், பெரிய அணியான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து டி20 உலக சாம்பியன்ஷிப் கோப்பையை பெற்றுக் கொடுத்தவர் தோனி என்று பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவை பார்த்து பொங்கி எழுந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங். ஆமா இந்த போட்டிகளில் ஆடும் போது தோனி மட்டும் தான் தனியாக விளையாடினார் மற்ற 10 வீரர்களும் விளையாடவே இல்லை. இந்தியாவுக்கு ஒரு முரண்பாடு உள்ளது. இங்கு ஆஸ்திரேலியா அணி ஜெயித்தால் ஆஸ்திரேலிய அணி ஜெயித்து விட்டது என்று கூறுகிறோம். அதே இந்திய அணி ஜெயித்து விட்டால் அதன் கேப்டன் ஜெயித்துவிட்டார் என்று கூறுகிறோம். கிரிக்கெட் அப்படி அல்ல ஒன்றாக சேர்ந்து தான் ஜெயிக்க முடியும். ஒன்றாக சேர்ந்து தான் தோல்வி அடைய முடியும் என்று அந்த பதிவில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க - WTC Final 2023: எங்கள் தோல்விக்கு அவர்கள் இருவர் தான் காரணம் - இறுதிப்போட்டிக்கு பின் ரோஹித் சர்மா!

அணியை வழிநடத்துவதற்கு கேப்டனின் பங்கு மிகப் பெரியது:
இதெல்லாம் ஒருபுறம் இருக்கா தோனி PR டீமை வைத்துக்கொண்டு செயல்படுவதாக கௌதம் கம்பீர் மறைமுகமாக சாடி இருப்பது தோனி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஹர்பஜன் சிங்கின் இந்த காட்டமான ட்விட்டர் பதிவும் தோனி ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. மூன்று ஐசிசி கோப்பை வென்ற இந்திய அணியில் கேப்டனாக இருந்திருக்கிறார். இவைத்தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்ற 5 முறையும் தோனி தான் கேப்டன். ஒரு அணியை வழிநடத்துவதற்கு கேப்டனின் பங்கு மிகப் பெரியது. இப்படி எல்லாம் இருக்க கம்பீரும் ஹர்பஜன் சிங்கும் பொறாமை பிடித்துக் கொண்டு இப்படி பேசுகிறார் என்று விமர்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்க - லியோனல் மெஸ்ஸின்னா சும்மாவா? சமூக ஊடகங்களில் தூள் கிளப்பும் கால்பந்து ரசிகர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News