பாராலிம்பிக் போட்டிகளில், இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. பேட்மிண்டன் ஒன்றையர் பிரிவில் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றதை அடுத்து இந்தியா இதுவரை 5 தங்கம், 8 வெள்ளி மற்றும் 6 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும், மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் (Tokyo Paralympic Games) இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்ப அதிர்ச்சியாக, இந்திய வீரர்கள் பதக்கங்களை தொடர்ச்சியாக வென்று வருகின்றனர். இந்தியாவின் சார்பில் பங்கேற்றிருக்கும் வீரர், வீராங்கனைகள் அசத்தலாக விளையாடி, இது வரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை வென்று குவித்து உலகளவில் இந்தியாவின் புகழை ஓங்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். நேற்றைய பதக்க பட்டியல் நிலவரப்படி இந்தியாவுக்கு 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் கிடைத்திருந்தது. பதக்கப்பட்டியலில் இந்தியா 25வது இடத்தை பிடித்திருந்தது.


ALSO READ | Tokyo Paralympic: மணீஷ் நர்வால், சிங்கராஜ் தங்கம் மற்றும் வெள்ளி வென்று சாதனை


இதைத் தொடர்ந்து, இன்றைய போட்டியில், உத்திர பிரதேச மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரியான சுஹாஸ் யாதிராஜ், பேட்மிண்டன் போட்டியில்  வெள்ளிப் பதக்கம் வென்று பதக்க வேட்டையை தொடக்கினார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூகாஸை 21-15, 17-21, 15-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெள்ளிப்பதக்கத்தை  வென்றார்.


இந்த நிலையில், பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில்,  இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப்போட்டியில் ஹாங்காங் வீரர் சூ மான் கை-யை 21-17, 18-21, 21-17 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை  வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கு கிடைத்த பதக்கங்கள் 19 ஆக உயர்ந்து, பதக்கப்பட்டியலில் இந்தியா 24வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பிரதமர் நரேந்திர மோடி, இருவரையும் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்




 


ALSO READ | Pkl 2021: புரோ கபடி லீக் சீசன் 8: அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR