Tokyo Paralympic: மணீஷ் நர்வால், சிங்கராஜ் தங்கம் மற்றும் வெள்ளி வென்று சாதனை

இந்தியா விளையாட்டு வீரர்கள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

Last Updated : Sep 4, 2021, 10:29 AM IST
Tokyo Paralympic: மணீஷ் நர்வால், சிங்கராஜ் தங்கம் மற்றும் வெள்ளி வென்று சாதனை title=

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் 50 மீட்டர் பிஸ்டல் SH1 பிரிவில், இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால், சிங்கராஜ் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளி வென்று, சாதனை படைத்துள்ளனர். இந்தியா விளையாட்டு வீரர்கள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் பதக்கங்களை குவித்து வருகின்றனர்.

ஹரியானா அரசு தங்கப் பதக்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு ரூ .6 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்ற சிங்கராஜ் அதனாவுக்கு ரூ .4 கோடியும் வெகுமதி அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி இருவருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

 

தமிழக் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலத்துடன் பதக்கப்பட்டியலில் இந்தியா 34வது இடத்தில் உள்ளது.

நேற்று, டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் ஹர்விந்தர் சிங் (Harvinder Singh) இந்தியாவுக்கு 13வது பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

முன்னதாக, பிரவீன் குமார் ஆண்களுக்கான உயரம் தாண்டும் போட்டியில், T64 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

ALSO READ | Pkl 2021: புரோ கபடி லீக் சீசன் 8: அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News