இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் மூன்று போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியும், ஒரு போட்டியில் இந்திய அணி வெற்றியும் பெற்றது. இதன் மூலம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றது. இந்த நிலையில் இரு அணிகள் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது.


கடைசியாக நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும், பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் வெற்றி வாய்ப்பு பறிபோனது. இதனால் தொடரையும் இலக்க நேரிட்டது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி, புஜாரா, ரஹானே தவிர மற்ற வீரர்கள் சரியாக ஆடவே இல்லை என்பது தான் உண்மை. இது பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இங்கிலாந்தில் உள்ள ஆடுகளத்தை பொருத்த வரை இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர் என்றே சொல்லாம். 


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக பயிற்சியாளர்கள் ரவிசாஸ்திரி மற்றும் சஞ்சய் பங்கர் தான் காரணம் என குற்றம்சாட்டினார்கள். இந்திய அணியின் மோசமான செயல்பாட்டிற்கு முன்னால் இந்திய வீரர்கள் சுனில் கவாஸ்கர், வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங் மற்றும் கங்குலி கடுமையாக விமர்சித்திருந்தனர்.


இந்நிலையில், நாளை ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இலண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும் எனத் தெரிகிறது. தொடரை வென்ற இங்கிலாந்து அணியும், தொடரை இழந்த இந்திய அணியும் கடைசி போட்டியில் மோத உள்ளதால் எதிர்பார்ப்பு ஏற்ப்பட்டு உள்ளது.