போட்செஃப்ஸ்ட்ரூம்: 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை அரையிறுதியில் பிரியாம் கார்க் தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 172 என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யான்ஷ் சக்சேனா ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் இந்த வெற்றி கிடைத்துள்ளது. ஜெய்ஸ்வால் 105 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே நேரத்தில் அவரது தொடக்க பங்குதாரர் 59 ரன்கள் எடுத்தார். இந்த ஜோடி பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்கவில்லை. இறுதியில் இந்திய அணி இலக்கை எளிதில் எட்டியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டியை இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக நுழைந்துள்ளது.


 



இந்திய பந்து வீச்சாளர்கள் முதலில் பாகிஸ்தானை 172 ரன்களுக்கு வீழ்த்தினர். இதன் பின்னர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் திவ்யான்ஷ் சக்சேனா ஆகியோரின் ஆட்டமிழக்காத கூட்டாண்மை இந்திய அணிக்கு எளிதான வெற்றியைக் கொடுத்தது. இந்தியா விக்கெட்டை இழக்காமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவின் சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அணி தங்கள் எதிர் அணயின் இலக்கை வெறும் 35.2 ஓவரிலேயே அடைந்தது. 


டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இருப்பினும், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் இந்திய பந்து வீச்சாளர்களின் முன்னால் நீண்ட நேரம் இருக்க முடியவில்லை. மூன்று பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களால் மட்டுமே இரட்டை இலக்கு ரன்களை தொட முடிந்தது. அதில் இருவர் அரை சதம் அடித்தனர். பாகிஸ்தான் அணி 43.1 ஓவருக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


 



19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் சுஷாந்த் மிஸ்ரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். கார்த்திக் தியாகி, ரவி பிஷ்னோய் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதர்வா அங்கோல்கர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.