ICC U-19 உலகக் கோப்பை 2022 போட்டியில் இந்தியா வங்கதேசத்தை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.  ஆண்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி U-19 உலகக் கோப்பை 2022 காலிறுதிப் போட்டியில், தொடக்க ஆட்டக்காரர் அங்கிரிஷ் ரகுவன்ஷியின் (Angkrish Raghuvanshi) சிறப்பான ஆட்டத்தினால்  இந்திய அணி 30.5 ஓவர்களில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ALSO READ | Team India: இந்திய டெஸ்ட் கேப்டன் பதவி இந்த 5 பேரில் யாருக்கு?


பேட்டிங்கிற்கு கடினமான இந்த பிட்சில், இந்திய கேப்டன் யாஷ் துல் (Yash Dhull) டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.  ஆரம்பம் முதலே அசத்திய ரவிக்குமார் (Ravi Kumar) ஐந்து ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இடது கை சுழற்பந்து வீச்சாளர் விக்கி ஆஸ்ட்வால் ( Vicky Ostwal) ஒரு ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி 15.4 ஓவர்களில் 37/5 என்று பங்களாதேஷ் அணியை திக்குமுக்காட செய்தார். 


எஸ்.எம்.மெஹெரோப் (SM Meherob) மற்றும் ஆஷிகுர் ரஹ்மான் இருவரும் இணைந்து எட்டாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது.  இறுதியாக 37.1 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது பங்களாதேஷ்.  இந்தியா சார்பில் ரவி 3/14, விக்கி 2/25 விக்கெட்களை எடுத்தனர். 



அதன் பின் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹர்னூர் சிங் (Harnoor Singh) ரன் ஏதும் இன்றி வெளியேறினார்.  பின்பு அங்கிரிஷ் ரகுவன்ஷி (Angkrish Raghuvanshi) தனது சிறப்பான ஆட்டத்தினால் 44 ரன்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.  ஷேக் ரஷீத் மற்றும் கேப்டன் யாஷ் துல் நிதானமாக ஆடி ரன்களை குவிக்க இந்திய அணி 30.5 ஓவர்களில் வெற்றி பெற்றது.  கடந்த முறை பைனல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணிக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ளனர் டீம் இந்தியா.


ALSO READ | பிசிசிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்த ரவி சாஸ்திரி! இதான் காரணம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR